விஜய் சேதுபதியின் 'எடக்கு' ட்ரெய்லர்' ரிலீஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் ஒவ்வொரு வருடமும் 5 படங்களாவது ரிலீஸ் செய்கிறார். பெரிய வெற்றிப் படங்களாக வராவிட்டாலும், ஓரளவு நல்ல வசூலைக் கொடுத்து விடுகின்றன இவரது படங்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்', '96', 'ஜுங்கா' உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. இத்துடன் 'எடக்கு' படமும் தயாராகி வருகிறது. இப்படத்தில் எதிர்பாராத கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.

Edakku trailer released

ஆனால் இந்தப் படம் தற்போது எடுக்கப்பட்ட படம் இல்லை. 6 வருடத்திற்கு முன்பு விஜய் சேதுபதி கன்னடத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்த 'அகடா' படம். இப்படத்தை விஜய் சேதுபதி உச்சத்தில் இருப்பதால் அவரை கதாநாயகன் போல் சித்தரித்து விளம்பரப்படுத்துகின்றனர்.

நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு இப்படத்தை தயாரித்து வரும் இப்படத்தை எஸ்.சிவன் இயக்கி வருகிறார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இந்தப் படத்தைப் பற்றி இதுவரை எதுவும் சொல்லாத நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X