twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்

    |

    சென்னை: மலேசியாவில் நடைபெறும் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக என் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் வருகையின் ஆரம்ப கட்டமான 1990களின் மத்தியில், தொலைக்காட்சி தொடர்கள் வரவால் எங்கே சினிமாவே அழிந்துவிடுமோ என்ற அனைத்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தன.

    Edappadi K.palaniswami wishes for Art Festival of Stars in Malaysia

    இதற்காக அன்றைய முதல்வரிடம் பேரணியாக சென்று கோரிக்கையும் அளித்திருந்தனர். ஆனால், நாளடைவில், சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஏன் இயக்குநர்களும் கூட உண்மையை உணர்ந்துகொண்டு, சின்னத்திரையிலும் சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்து இன்று வரை வெற்றிநடை போட்டு வருகின்றனர்.

    தற்போது வெள்ளித்திரையில் மின்னும் நடிகர்களும் சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சினிமாவும் சின்னத்திரையும் இரட்டை குழந்தைகளாகவே வலம் வருகின்றன. சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்பான எந்த நிகழ்வானாலும் இரு துறையினரும் சேர்ந்தே கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது மலேசியாவில் வருகிற 28ஆம் தேதி சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர்களின் மாபெரும் கலை விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சின்னத்திரை நடிகர் சங்கக்தலைவர் A.ரவிவர்மா தலைமையிலான குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு செய்து வருகின்றனர்.

    குடும்ப வாழ்க்கையில் எனக்கு விருப்பமே கிடையாது - அக்ஷய் கண்ணாகுடும்ப வாழ்க்கையில் எனக்கு விருப்பமே கிடையாது - அக்ஷய் கண்ணா

    இவ்விழாவுக்கான அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுச் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா மலேசியாவில் 28.09.2019 அன்று நடைபெறுவது அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் முக்கிய அலுவல் காரணமாக என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.

    இந்த இனிய விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக என் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் சங்க உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரியது.

    சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற அயராது உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

    இந்தக் கலைவிழாவில் பெரிய திரையான திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்களும் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்துள்ளனர். எனவே அவர்களின் வரவையும் சின்னத்திரைக் கலைஞர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    On behalf of the Government of Tamil Nadu, I warmly extend my heartfelt good wishes to all the iconic stars who are participating in the Art Festival of Stars in Malaysia, Chief Minister Edappadi K. Palaniswami congratulated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X