»   »  சேப்பாக்கம் ஷூ வீச்சு: மன்னிப்பு கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட விஜய், அஜீத் பட எடிட்டர் #FafDuPlessi

சேப்பாக்கம் ஷூ வீச்சு: மன்னிப்பு கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட விஜய், அஜீத் பட எடிட்டர் #FafDuPlessi

Posted By:
Subscribe to Oneindia Tamil
டூப்ளசிடம் மன்னிப்பு கேட்ட சினிமா பிரபலம்- வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் போராடி வரும் நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சோறா, ஸ்கோரா என்று கேட்டு போராடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

மைதானத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது சிலர் தங்களின் காலணிகளை கழற்றி மைதானத்தில் வீசினார்கள்.

ஷூ

ஷூ

மைதானத்திற்குள் விழுந்த ஷூ ஒன்றை சிஎஸ்கே வீரர் டூப்ளசி எடுத்து வந்து ஓரமாக போட்டார். கையில் ஷூவை எடுத்த பிறகு அவர் பார்வையாளர்களை பார்த்து என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா என்பது போன்று பாவமாக ஒரு பார்வை பார்த்தார்.

மன்னிப்பு

விருந்தோம்பல் - தமிழனின் தலையாய பண்பாடு! இதை செய்தவன் - தமிழினத்தில் ஒரு வேறுபாடு! மன்னிப்புக்கள் @faf1307 #CSKvKKR என்று ட்வீட்டியுள்ளார் ரூபன். ஆனால் இதற்கு கடுமையான எதிர் வினைகளை பல்வேறு தரப்பினரும், தமிழ் ஆர்வலர்களும் அவரது டிவீட்டில் ஆற்றி வருகின்றனர்.

Read more about: ipl 2018 ஐபிஎல்
English summary
Editor Reuben was angry after seeing tamils hurling shoe in the ground when CSK and KKR players were playing in the yesterday's IPL match held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X