ஹாலிவுட் தரத்திற்கு உருவாகிவரும் சிவகார்த்தியின் அயலான்... எடிட்டர் ரூபன் பாராட்டு
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.
படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது சிஜி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் அவருக்கு சிறப்பான வகையில் கைகொடுத்துள்ளது. இந்தப் படம் அவரது சினிமா கேரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அவர் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

டான் படம்
இந்தப் படத்தில் கடத்தலை கண்டுபிடிக்கும் கேரக்டரில் அவர் நடித்திருந்த நிலையில், அடுத்ததாக டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டமான ஸ்டூடண்டாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயலான் படம்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது அயலான் படம். இந்தப் படத்தில் ஏலியன் ஒன்று பூமிக்கு வருவதாக கதை உள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. படத்தில் சிவாவிற்கு ரகுல் பிரீத் சிங் ஜோடியாகியுள்ளார்.

தீபாவளி ரிலீஸ்?
மேலும் படத்தில் இஷா கோபிகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன் போன்றவர்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ரவிக்குமார் இயக்கம்
24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் டி ராஜா இந்தப் படத்தை தயாரித்துவரும் நிலையில் படத்தை இயக்கி வருகிறார் இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமார். படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். நீரவ் ஷா ஒளிப்பதிவு மற்றும் ரூபன் எடிட்டிங் என்ற சிறப்பான கலைஞர்களுடன் படம் களத்தில் உள்ளது.

எடிட்டர் ரூபன் பாராட்டு
கடந்த ஆண்டே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து படத்தின் சிஜி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படம் குறித்து எடிட்டர் ரூபன் தற்போது பேசியுள்ளார். ஹாலிவுட் தரத்திற்கு இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சயின்ஸ் பிக்ஷன் படம்
சயின்ஸ் பிக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மைல்கல்லாக அயலான் படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ரிலீசானால் கண்டிப்பாக எளிதாக 100 கோடி க்ளப்பில் இணையும் என்றும் ரூபன் கூறியுள்ளார்.

சர்வதேச தரத்தில் படம்
இந்தப் படத்தின் சிஜி வேலைகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் சர்வதேச அளவில் இந்தப் படம் கண்டிப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தின்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் எதிர்பார்ப்பு தொடர்ந்து எகிறி வருகிறது.


Click it and Unblock the Notifications











