ஷங்கர் ரொம்ப மோசம்.. பணத்தை மதிக்க தெரியல.. கேம் சேஞ்சர் பட எடிட்டர் குற்றச்சாட்டு!

சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர், ஜென்டில்மேன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து, காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து பெயர் சொல்லும் இயக்குநராக மாறினார். ஆனால், இவர் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுமே தோல்வித்திரைப்படமாகிவிட்டதால், பல விமர்சத்தை சந்தித்து வருகிறார். கேம் சேஞ்சர் படத்தில் பணியாற்றிய எடிட்டர் ஷங்கருக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை கூறியுள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ராம்சரண் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில், ராம் சரண் ஹீரோவாகவும், எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தில் பிரம்மாண்டம் தான் இருக்கிறது. கதை இல்லை என முதல் நாளிலேயே படம் பார்த்த ரசிகர்கள் மோசமான விமர்சனத்தை கொடுத்தனர். இதனால், படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்து தயாரிப்பாளர் பெரும் நஷ்டமடைந்தார்.

Game Changer Shankar

கேம் கேஞ்சர்: படத்தை பார்த்த பல விமர்சகர்கள் ஷங்கர் இயக்கிய முதல்வன், அன்னியன் படத்தில் இருந்தே பல காட்சிகளை வைத்து படத்தை எடுத்து இருக்கிறார் என்றும். வெறும் பிரம்மாண்டத்தை நம்பி படம் எடுத்தால் இப்படித்தான் ஆகும் என்றும், இந்தியன் 2 படத்திற்கும் தோல்விக்கும், கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கும் ஷங்கர் தான் காரணம் என பலர் இணையத்தில் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் எடிட்டராக பணியாற்றி ஷமீர் சார்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், ஷங்கருக்கு ஒரு படத்தை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. மொத்தம் படத்தையும் 7.30 மணி நேரம் எடுத்து கொடுத்து அதை 3 மணி நேரமாக்க சொன்னார்.

எடிட்டர் குற்றச்சாட்டு: இதை மூன்று மணி நேரம் படமாக கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்னையிலேயே தங்கி இருந்தேன். பின்பு அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதன் பிறகு கேம் சேஞ்சர் படத்தில் எடிட்டராக ரூபன் பணியாற்றினார். தேவையே இல்லாமல் தயாரிப்பாளரின் பணத்தை போட்டு, ஒரு படத்தை ஏழரை மணி நேரம் எடுத்து அதை 3 மணி நேரம் ஆக்குவது என்பது சரியான செயல் இல்லை. வீணான இந்த பணத்தில் எத்தனையோ சின்ன படங்களை எடுத்து இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். தயாரிப்பாளரின் பணத்தை இப்படியா ஷங்கர் வீணாப்பது சரியில்லை என்று எடிட்டர் கூறியுள்ளார். இவர், அங்கமாலி டயரீஸ், நரிவேட்டை போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். இவரின் இந்த அதிரடியாக குற்றச்சாட்டு பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கதையில் நிறைய மாற்றங்கள்: அதே போல, அண்மையில், கேம் சேஞ்சர் தோல்வி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், கதையின் ஒன்லைனை மட்டும் நான் ஷங்கர் சாரிடம் கொடுத்தேன். உறுதியான கொள்கைகளைக் கொண்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, அரசியல்வாதியாக மாறுவது பற்றிய கதை அது. ஷங்கர் சாருக்குக் கதையைக் கொடுத்தபோது, அவர் அதை எப்படி விரிவுபடுத்துவார் என்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆனால், படத்தை திரையில் பார்க்கும் முற்றிலும் வேறு கதையாக இருந்தது. பல எழுத்தாளர்கள் அந்தப் படத்தில் பணியாற்றி இருந்தார்கள். இதனால், திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கதையிலும் மாற்றம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X