வலிமை படத்தின் சூப்பர் சீக்ரெட் வெளியானது.. இந்த காரணத்திற்காகத்தான் வினோத் அப்படி பண்றாராம்!

சென்னை: வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே அந்த படம் குறித்த சூப்பரான சீக்ரெட் ஒன்று கசிந்துள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இசை யுவன் சங்கர் ராஜா.

இதைத் தவிர இதுவரை படக்குழு வேற எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இவர் தான் ஹீரோயின்

இவர் தான் ஹீரோயின்

ஆனால், வலிமை படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வரும் தகவல் கசிந்தது. பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் காதலியாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபெமினா ஃபேஷன் இதழுக்காக ஹூமா குரேஷி கொடுத்த போஸ் வைரலானது.

மீண்டும் பாலிவுட் நடிகை

மீண்டும் பாலிவுட் நடிகை

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டோலிவுட் ஹீரோ

டோலிவுட் ஹீரோ

அதே போல வலிமை படத்தில் வில்லனாக டோலிவுட் ஹீரோவான கார்த்திகேயா நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சிக்ஸ் பேக் வைத்து முரட்டுத் தனமாக இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு அஜித் ரசிகர்களுக்கு நேரடியாகவே தான் வலிமை படத்தில் நடிக்கும் விசயத்தை ஓப்பன் செய்தார். பைக் ரேஸிங் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வரும் நிலையில், கார்த்திகேயா பைக் ரேஸராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் கதாபாத்திரம்

அஜித்தின் கதாபாத்திரம்

வலிமை படத்தில் டபுள் ரோலில் அஜித் நடித்து வருகிறாரா இல்லை இரு வேறு கெட்டப்புகளா என்பது தெரியவில்லை. ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக தல அஜித் நடித்து வரும் தகவல் மட்டும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பைக் ரேஸிங் எனும் பெயரில் மறைமுகமாக நடைபெறும் கடத்தல் வேலைகளை அஜித் சீக்ரெட் ஏஜென்ட்டாக மாறி அவரும் பைக் ரேஸராக கலந்து கொண்டு கண்டுபிடிப்பார் என்றும் நெட்டிசன்கள் கெஸ்ஸிங் கதைகளை கணித்து வருகின்றனர்.

சூப்பர் சீக்ரெட்

சூப்பர் சீக்ரெட்

வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இத்தனை தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், தற்போது வலிமை படத்தை எடிட் செய்து வரும் எடிட்டர் குறித்த சூப்பர் சீக்ரெட் தெரியவந்துள்ளது. விஜய் வேலுக்குட்டி எனும் எடிட்டர் தான் வலிமை படத்தை எடிட் செய்து வருகிறாராம்.

வினோத் ஐடியா

வினோத் ஐடியா

பெரும்பாலும் இயக்குநர்கள் ஒரே எடிட்டர் உடன் தான் பணியாற்றுவார்கள். ஆனால், இயக்குநர் எச். வினோத் அதிலும் மாறுபட்டவராகவே இருக்கிறார். ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் சங்கு சக்கரம் உள்ளிட்ட படங்களுக்கு எடிட் செய்த விஜய் வேலுக்குட்டியை வைத்து இந்த படத்தை எடிட் செய்து வருகிறார். ஒவ்வொரு படத்துக்கும் புதிய எடிட்டருடன் வேலை செய்தால், ஃபிரெஷ் கட்ஸ் கிடைக்கும் என்பது வினோத்தின் நம்பிக்கை.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

இந்தியாவில் வலிமை படத்தின் ஷூட்டிங் மொத்தமும் முடிவடைந்து விட்டது. ஸ்பெயின் நாட்டில் ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சியை படமாக்க படக்குழு வரும் ஏப்ரல் மாதம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மார்ச் மாதம் வலிமை படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், தல அஜித்தின் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X