twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்!

    வாழ்வில் முன்னேற கல்வியும், ஒழுக்கமும் முக்கியம் என நடிகர் சிவக்குமார் கூறினார்.

    |

    Recommended Video

    அகரம் பவுண்டேஷன் சார்பாக பரிசளிப்பு விழா-வீடியோ

    சென்னை: ஒருவர் வாழ்வில் முன்னேற கல்வியும், ஒழுக்கமும் தான் மிக முக்கியம் என நடிகர் சிவக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
    நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மற்றும் நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில், ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சிவக்குமார், சூர்யா மற்றும் பேராசிரியர் கல்யாணி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000/- பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான 'தாய்தமிழ் பள்ளிக்கு' ஒரு லட்சம் ரூபாயும், முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், " இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைவரும் நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். ஹீரோ சூர்யாவின் அப்பா என்றவுடன் பணக்காரன் என நினைத்துவிடாதீர்கள்.

    Education and discipline are important for life: Actor Sivakumar

    நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. அடிப்பிடிச்ச சோறு தான் எனது உணவு. மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும்.

    இப்போது என் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சண்டிகரிலிருந்து கன்னியாகுமரி வரை படிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆனது. அதற்கே 7450 ரூபாய் தான் ஆனது. அப்போ எவ்வளவு சிக்கனமாக இருந்திருக்கிறேன் என்று நினைத்து பாருங்கள்.

    இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன் தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறைவோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. அப்படியென்றால் எவ்வளவு தைரியத்தில் இருந்திருக்கிறேன் பாருங்கள்.

    Education and discipline are important for life: Actor Sivakumar

    இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா - அம்மா என்ன செய்றாங்க போன்ற எதையுமே கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம். உடம்பைப் பேணுங்கள். வாழ்வாங்கு வாழுங்கள்".
    இவ்வாறு நடிகர் சிவக்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    English summary
    After distributing prizes to the students through his educational trust, actor Sivakumar advised the students that education and discipline are most important things to succeed in life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X