ஈ அடிச்சான் காப்பினா இதுதானா? ‘நான் ஈ‘ படத்தை காப்பி அடித்த லவ்லி படக்குழு.. தயாரிப்பாளர் நோட்டீஸ்!
சென்னை: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஈகா'. தெலுங்கில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது. தமிழில் 'நான் ஈ' என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை காப்பி அடித்து மலையாள படமான லவ்லி படத்தை எடுத்து இருப்பதாக ' நான் ஈ' படத்தின் தயாரிப்பாளர் லவ்லி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்து பிரபலமான நடிகர் மேத்யூ தாமஸ். மலையாளத்தில் 'லவ்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் காப்பியா: எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் எப்படி ஆண் ரோலில் ஈ வருமோ அதோ போல, லவ்லி படத்தில் பெண் கதாபாத்திரத்தில் 'ஈ' வருவது போல காட்சிகள் உள்ளன. இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியான போதே, இது ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படத்தைப் போல இருப்பதாக பேசப்பட்டது. அப்போது, படக்குழுவினர் இந்த படத்திற்கும், அந்த படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை. கதைகள் பல மாற்றங்கள் செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, லவ்லி படம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
லீகல் நோட்டீஸ்: தற்போது, 'லவ்லி' படம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில், 'நான் ஈ' படத்தின் தயாரிப்பாளர் 'லவ்லி' படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், படத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஈ'யின் உருவ அமைப்பு, 'நான் ஈ' படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதை, அப்படியே 'லவ்லி' பட குழுவினர் தங்களது படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய 'லவ்லி' படத்தின் இயக்குநர், தினேஷ் நாயர், 'நான் ஈ' பட தயாரிப்பு தரப்பிலிருந்து இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த நோட்டீசை பார்த்ததும் நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
அந்தப் படத்தின் நாயகியான உன்னி மாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்து தான் லவ்லி படத்தில் வரும் 'ஈ'யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதே, தவிர 'நான் ஈ' படத்தில் வருவதைப் போல ஆண் கதாபாத்திரம் இல்லை. இதுகுறித்து உரிய விளக்கத்தை நாங்கள் நிச்சயம் 'நான் ஈ' தயாரிப்பாளரிடம் கொடுப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications











