ஈழத்து மெல்லிசை மன்னர் பரமேஷ்.. மனைவிக்காக பாடிய பாடல் இன்றும் ட்ரெண்டிங் !

கொழும்பு : அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் இசைப்பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தபோவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடிவரும் கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பலரும் சொல்லி வருகின்றனர்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இசையோடுதான் என்று தனது வாழ்க்கையை பற்றியே இயற்றி, இசையமைத்து பாடியவர் பணத்தை எதிர்பார்க்காமல் அவமானங்களை தோல்விகளை கண்டு பயப்படாமல் எவர்

தனது லட்சிய பாதையில் தொடர்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டு மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் தனது காதலிக்கு எழுதிய „உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத்தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் M.P.பரமேஷ்.

எதிர்ப்புகளை சந்தித்தார்

எதிர்ப்புகளை சந்தித்தார்

அவரின் காதலி "சங்கீத பூஷனம்" சிவமாலினி தான் இந்த சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு சங்கீத பூஷணம் என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு சங்கீத பூஷணம் கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும் தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்க கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார்.

அழிக்க முடியாத சாதனை

அழிக்க முடியாத சாதனை

அதையெல்லாம் பொருள் படுத்தாமல் சினிமா பாடலும் இசை தான் என்று பதில் சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி. மாலினி மீது வைத்த காதல் தான் "உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான பாடலாகும். அதை தொடர்ந்து M.P.பரமேஷ் நீயின்றி நிலவு , . போகாதே தூர போகாதே , நீ வாழுமிடமெங்கே , மனமாளிகை ரோஜா , எழுதுகிறேன் பாட்டு , அழைக்குமோசை கேக்கலையா , பாடலெனக்கிது முதல் தரம் தான் என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார்.

இலங்கை தமிழனால்

இலங்கை தமிழனால்

இந்த 8 பாடல்களையயும் 3 இசைத்தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் 1வது வெளியிடப்பட்ட இசைத்தட்டில் "உனக்கு தெரியுமா" பாடல் சாதனை படைத்தது. அதாவது இலங்கையின் முதலாவது தமிழ் பாடல், ஒரு இலங்கை தமிழனால் உருவாக்கப்பட்டு, இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் இசையமைக்க முடியும், இந்திய சினிமாவைத்தாண்டி தனிப்பட்ட கலைஞர்களுக்கும் இசை உலகில் சாதனை படைக்க முடியும், அதுவும் இலங்கையில் முடியும் என்று நிரூபித்த பாடல்.

மொழி மாற்றம் செய்து

மொழி மாற்றம் செய்து

பரமேஷ் உருவாக்கப்பட்ட "உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" என்று அவர் தனது காதலுக்காக அவரது காதலிக்கு உருவாக்கிய பாடலே தான். இசைத்தட்டுகளில் வெளியிடபட்ட இந்த 8 பாடல்களும் இந்திய திரையிசை பாடல்களுக்கு சமமான தரத்தில் இருந்தது இவரின் பெரும் வெற்றி. அது மட்டுமல்லாது 4வது இசைத்தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசைதட்டுகளிலும் பரமேஷ் வரிகளிலும் இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள் தான். அவற்றை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து சிங்கள பாடகர்களை பாட வைத்து மீண்டும் புதிய பாதையில் சென்று தமிழிசை கலைஞர்களுக்கு பெருமை சேர்த்தார். பின்வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும்.பரமேஷ் தான் சிங்கள மொழியிலும் உனக்கு தெரியுமா பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானொலியில் பாடல்களை

வானொலியில் பாடல்களை

ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத்தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது. அதற்கும் காதல் தான் தூண்டுதலாக இருந்தது. காதலி மாலினி அந்த காலம் சங்கீதம் படிப்பதற்காக இந்தியா சென்றிருந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்தார். காதலிக்காக உருவாக்கிய பாடல்கள் அவரின் காதில் விழவேண்டுமென்பது பெரிய ஆசை. அதற்காகவே இலங்கை வானொலியில் பாடல்களை ஒலிக்கவைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். மூத்த கலைஞர்கள் உதவியுடன் அந்த கனவும் நினைவாகியது.

இந்திய நடிகர்கள் அளவுக்கு

இந்திய நடிகர்கள் அளவுக்கு

இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுது தான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் பரமேஷ் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றித்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார். பரமேஷ் போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள் கூட மறந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விஷயம் தான்.

எடிசன் விருது பெற்ற பெருமை

எடிசன் விருது பெற்ற பெருமை

1986ல் ஜெர்மனி சென்ற பரமேஷ் இசையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மனைவி மாலினி 2000ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகள், ஈழத்து மெல்லிசை குயில் "பிரபாலினி பிரபாகரன்" இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழ தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்க படுபவர் இந்த ஈழதமிழ் மகள்.

அன்பு காதலன்

அன்பு காதலன்

கடந்த ஆண்டு பரமேஷ் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழா கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல விருதுகளை பெற்ற பரமேஷ் 2019ல் ஜெர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப்பெற்றார். இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! பரமேஷ் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platform களிலுல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஈழத்து மெல்லிசை மன்னர் . பரமேஷ்க்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பல பிரபலங்கள் கூறி வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X