நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை ஈரம் இயக்குனர் அறிவழகன் இயக்குகிறார்!

சென்னை : நடிகை நயன்தாரா இப்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில திரைப்படங்களை தயாரித்து நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மீண்டும் விக்னேஷ் சிவன்

மீண்டும் விக்னேஷ் சிவன்

முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் தரமான கதைகளில் நடிப்பதிலும் ஹீரோவுக்கு நிகராக வசூல் செய்வதிலும் பலருக்கு முன்னோடியாக விளங்கி வரும் நடிகை நயன்தாரா நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் மற்றொரு கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நயன்தாரா நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நிறைவுற்ற நிலையில் அதன் இறுதிகட்ட பணிகளும் தொடங்கப்பட்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது.

மாற்றுத்திறனாளி பெண்

மாற்றுத்திறனாளி பெண்

தரமான திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தரமான கதைகளை கொண்ட அறிமுக இயக்குனர்களின் படங்களை தயாரித்து வெளியிட்டும் வரும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக தயாரித்து வெளியிடும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதையை கூறியுள்ளார்

கதையை கூறியுள்ளார்

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்து உள்ளது. அதன்படி ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அறிவழகன் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுக்கு இந்த கதையை கூறியுள்ளார். மிகவும் பிடித்துப்போக முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

தயாரிக்கவும் உள்ளார்

தயாரிக்கவும் உள்ளார்

இந்த நிலையில் மாற்ற பட பணிகளில் நயன்தாரா பிஸியாக இருந்ததால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென தன்னுடைய அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக நயன்தாரா கூறி இருக்க இந்தப் படத்தையும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X