ஈரம் பட நடிகையை ஞாபகம் இருக்கா.. அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டான சிந்து மேனன்!

சென்னை: ஈரம் படத்தின் மூலம் பிரபலமான சிந்து மேனன் அடையாளமே தெரியாத அளவிற்கு ஓவர் வெயிட் போட்டுள்ளார்.

பெங்களூரில் பிறந்த சிந்து மேனன் கன்னடம் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

eeram movie actress Sindhu menon latest photos

இதையடுத்து தமிழில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக துர்கா என்ற படத்தில் நடித்தார். அதன் பின் யூத் படத்தில் நடித்தார்.

சிந்து மேனன்: யூத் படத்திற்கு பின் தமிழில் படவாய்ப்பு இல்லாததால் கன்னடம், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து வந்த சிந்து மேனனுக்கு ஒன்பது வருடங்கள் கழித்து ஈரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆதி, நந்தா, சரண்யா மோகன் என பலர் நடித்திருந்தனர்.

eeram movie actress Sindhu menon latest photos

சிறப்பான நடிப்பு: இந்த படத்தில் ரம்யா என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்து பலரின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்கு பின் தமிழில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த சிந்து மேனனுக்கு படவாய்ப்பே சரியாக அமையவில்லை. இவர் தமிழில் நடித்தது ஒரு சில திரைப்படங்களில் தான் என்ற போதும் சிந்து மேனன் அனைவருக்கும் தெரிந்த முகமாகவே இருந்தார்.

தொழிலதிபரை மணந்தார்: சிந்து மேனனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதையடுத்து, 2010 ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த தொழிதிபரை திருமணம் செய்து கொண்டு லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின் இவரது நடிப்பில் ஒரு சில படங்கள் வெளியாகின.

eeram movie actress Sindhu menon latest photos

3 குழந்தைகளின் அம்மா: திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குடும்பத்தை கவனித்து வரும் சிந்து மேனன் தற்போது 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். மூத்த மகள் சிந்து மேனனைப்போல அதே அழகுடன் இருக்கிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிந்து, அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அழகான க்யூட்டான அம்மாவாக மாறி சிந்து மேனன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அதிகரித்து காணப்படுகிறார். இந்த போட்டோக்களைப் பார்த்த ஈரம் பட ரசிகர்கள் சிந்துவா இது என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X