நடுரோட்டில் ஒருவனை கன்னத்தில் பளார் பளார்னு அடித்தேன்...ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பேட்டி!
சென்னை: ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை நடுரோட்டில் ஒருவனை பளார் பளார் என்று அடித்தது குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடர் இளைஞர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாகும்.

திங்கள் முதல் சனிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகை மீனா வேமுரி: பிரபலமான இந்த தொடரில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வருகிறார் நடிகை மீனா வேமுரி. மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறேன். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மீனா வேமுரி பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஜாலியாக இருப்பேன்: நான் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன், அனைவரும் என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பா ஜாலியா இருக்கும் என்றார். ஆனால், சில நேரம் ஷூட்டிங் நாளைக்கு இருக்கு கால் வரும்னு சொல்லுவாங்க, நாம அதை நம்பி மற்ற ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு காத்திருந்தால் போன் வரவே வராது. அந்த நேரத்தில் டென்ஷனாகி கத்தி இருக்கிறேன்.

அட்ஜஸ்ட்மெண்ட்: அதேபோல, எட்டு வருடமா சினிமாவில் இருக்கிறேன் இதுவரைக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை எனக்கு வந்ததே இல்லை. ஆனால் சிலர் போன் செய்து பட வாய்ப்பு குறித்து பேசும் போது வழிந்து பேசுவார்கள், அவர்கள் அப்படி பேசும் போதே, என்ன விஷயம் சொல்லுங்க என்று கேட்டு அவர்களை ஆப் செய்து விடுவேன். அட்ஜஸ்ட்மென்ட் மாதிரி விஷயத்தை என்கிட்ட பேசாதீங்க என்று நேரடியாக சொல்லிவிடுவதால் இதுவரை எனக்கு அந்த பிரச்சனை வந்தது இல்லை என்றார்.
நடுரோட்டில்: தொடர்ந்து பேசிய மீனா வேமுரி, ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது, காரை நான் திருப்பியது சரி இல்லை என்பதால், என்னை ஒருவர் பின்தொடர்ந்து வந்து, என் காரை இடிக்கும் நிறுத்தி எனக்கு உயிர்பயத்தை காட்டினார். அந்த நேரத்தில் நான் காரைவிட்டு இறங்கி நடுரோடு என்று கூடபார்க்காமல் அந்த நபரை பளார் பளார் என்று அடித்துவிட்டேன். நான் காரை சரியாக ஓட்டவில்லை என்றால் என்னை திட்டி இருக்கலாம்,அதைவிட்டு விட்டு காரை இடிப்பது போலவந்ததால் நான் டென்ஷனாகிவிட்டேன் என்று அந்த பேட்டியில் மீனா வேமுரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











