சீரியல் கொடுமைகள் 2.0… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: நம்ம ஊர் இல்லத்தரசிகளுக்கு சீரியல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு மனதுக்கு பிடித்த சீரியலை பார்த்து வருகின்றனர்.

என்னத்தான் பொழுதுப்போக்கிற்காக சீரியலை பார்க்கிறோம் என்றாலும், மேக்கப் கொஞ்சம் கூட கலையாமல் இவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.

eeramana rojave 2, Ilakkiya, Aruvi top tv serials sothanaigal fans trolled

அப்படி சீரியலில் நடந்த கொடுமையை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இலக்கியா: பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் இலக்கியா. இந்த தொடரில் கடந்த ஒருவாரமாக ஒரே டாப்பிக்குத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அது என்ன என்றால், தொடரின் நாயகனின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். அந்த பார்ட்டிக்கு தொடரின் நாயகி இலக்கியாவின் தம்பி குடித்துவிட்டு வந்து விடுகிறார். இதனால், இலக்கியாவின் மாமியார் அவரது குடும்பத்தை அசிங்கப்படுகிறார். ஒரு வாரத்துகதையை இழுத்து இழுத்து சொன்னாக்கூட நாலு நாள் வரிவரவில்லை. ஆனால், இலக்கியா தொடரின் இயக்குநர் இந்த விஷயத் ஒருவாரத்தையே ஓட்டிவிட்டார். இன்னும் எத்தனை வாரம் இதே டாப்பிக்கை ஓட்டப்போகிறார் என்று தெரியவில்லை.

அருவி: இந்த கதைதான் இப்படி என்றால், இது என்ன பிரமாதம் என்பது போல அருவி சீரியல். அந்த சீரியலில் கதையின் ஹீரோயின் அருவியின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ஒட்டுமொத்த குடும்படும் சேர்ந்து கொண்டு, சீரியசாக இருக்கும் அப்பாவை பார்க்கக்கூடாது என்று ஆர்டர் போட, கண்ணீருடன் கதறும் அருவி, அப்பாவுக்கு வீடியோ கால் செய்து, அப்பா என்ன ஆச்சுப்பா என்று கதறுகிறார்.

eeramana rojave 2, Ilakkiya, Aruvi top tv serials sothanaigal fans trolled

ஹார்ட் அட்டாக்கில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்றால், அருவி இங்கு வந்தே ஆகவேண்டும் என்று மருத்துவர் சொல்லுவதுதான் செம காமெடி. அருவி என்ன ஹார்ட் சர்ஜனா வந்ததும் ஆப்ரேஷன் செய்து காப்பாற்ற. ஓரளவுக்கு காதுல பூ சுத்தலாம், சும்மா காது கிடைக்கிறது என்பதற்காக இப்படி முழம் முழமா பூ சுத்துனா எப்படி டைரக்டர் சார்.

ஈரமான ரோஜாவே 2: அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஈரமான ரோஜாவே 2. உண்மையில் இந்த சீரியலை பார்க்க மனசுக்கு நிறையவே ஈரம் வேண்டும். கர்ப்பமாக இருக்கும் காவியா அது அபார்ஷன் ஆனதை கணவரிடமிருந்து மறைத்து வருகிறார். இந்த கொடுமையான டாப்பிக் பல வாரமாக போய்க்கொண்டு இருக்கிறது.

இதில் நேற்றைய எபிசோடில் பார்த்திபன், மனைவிக்கு பால் பாட்டிலை கிஃப்டா வாங்கி தருகிறார். இதை கையில் வாங்கும் காவியா கண்கலங்கி அழுகிறார். அப்பக்கூட, குழந்தை எப்போ பிறக்கும் என்று கேட்கிறார். மாசமா இருந்தா வயிறு பெருசா இருக்கும் என்றுக்கூடவா தெரியாது. ஒருவேளை ஹீரோவுக்கு கல்யாணம் என்றால் என்னதுனே தெரியாத சின்னத்தம்பி போல, கர்ப்பம் என்றால் என்னதுனே தெரியாத பெரிய தம்பியாக இருப்பாரோ.

eeramana rojave 2, Ilakkiya, Aruvi top tv serials sothanaigal fans trolled

புளிச்ச மாவு: காதல், கல்யாணம், நிச்சயதார்த்தம், காதலிச்ச பெண்ணை அண்ணன் கல்யாணம் பண்ணிப்பான், குடும்பத்தை கெடுக்க நினைக்கும் வில்லி, பணத்தாசை பிடித்த வில்லன், மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார், கணவனின் பேச்சை மீராத மனைவி என இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த புளித்த மாவை வைத்து தோசை ஊத்தபோறீங்க என்று தெரியவில்லை என இணையவாசிகள் திட்டிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X