இவர்தான் அவருக்குத் தோழியாம்.. சமந்தா நடிக்கும் புராண படத்தில் இணைந்த பிரபல நடிகை!

By

ஐதராபாத்: சமந்தா நடிக்கும் புராண காதல் கதையான சகுந்தலையில், மற்றொரு ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர். ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு, ருத்ரமாதேவி உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

மகேஷ்பாபு நடிப்பில் இவர் இயக்கிய 'ஒக்கடு' படம்தான், தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி' ஆனது.

புராண காதல் கதை

புராண காதல் கதை

இவர், அடுத்து, சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமான சகுந்தலையின் கதைதான் இது. விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள், சகுந்தலை. இவர், மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார்.

எப்படி சகுந்தலை

எப்படி சகுந்தலை

பின்னர் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன். முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு துன்பங்களை கடந்து கணவருடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை. இந்தக் கதையை மையமாக வைத்து படம் உருவாகிறது.

பான் இந்தியா

பான் இந்தியா


சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். இதை குணா டீம் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நீலிமா குணா தயாரிக்கிறார். மணிசர்மா இசை அமைக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. ஏற்கனவே, சகுந்தலையின் காதலை மையமாக வைத்து சில புராண படங்கள் வெளியாகி உள்ளன.

தேவ் மோகன்

தேவ் மோகன்

இது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. இதில் மலையாள நடிகர் தேவ் மோகன், சமந்தா ஜோடியாக நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மாடலான இவர், மலையாளத்தில் வெளியான சூஃபியும் சுஜாதாயும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இஷா ரெப்பா

இஷா ரெப்பா

இந்நிலையில், நடிகை இஷா ரெப்பா இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. சமந்தாவின் தோழியாக அவர் நடிக்கிறார். படம் முழுவதும் வரும் கேரக்டர். இஷா ரெப்பா, தமிழில், ஒய் என்ற படம் மூலம் அறிமுகமானவர். பிறகு, எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X