இதே வேலையா போச்சு.. பிரபல நடிகையின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள்.. ஹீரோயின் அதிர்ச்சி!

By

சென்னை: பிரபல நடிகையின் ட்விட்டர் கணக்கை யாரோ சிலர் திடீரென முடக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

மண்ட பத்திரம்.. காஸ்ட்லி, ஹார்லி டேவிட்சன் பைக்கில் பிரபல ஹீரோயின் ஜாலி ரெய்டு..வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்தாலும் கொரோனா தொற்று பரவி விடுகிறது.

இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் இந்த தொற்று பரவி வருகிறது.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமா சினிமா தொழில் முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

இதனால் நடிகர், நடிகைகளின் ஒரே பொழுதுபோக்காக மாறி இருக்கிறது சமூக வலைதளங்கள். அவர்கள் அதில் தங்கள் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை குறிவைத்து சிலர் முடக்கி வருகின்றனர்.

ஊர்வசி ரவ்தெலா

ஊர்வசி ரவ்தெலா

பல நடிகர், நடிகைகளின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்பட பல நடிகைகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதுபற்றி அப்போது அவர்கள் தெரிவித்து இருந்தனர். பின்னர் டெக்னிக்கல் குழுவால் அந்த கணக்குகள் மீட்கப்பட்டதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ட்விட்டர் கணக்கு

ட்விட்டர் கணக்கு

இந்நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் ட்விட்டர் கணக்கு இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் இஷாவின் கணக்கை யாரோ சிலர் முடக்கி வைத்துள்ளனர். அவர் கணக்கை மர்ம நபர்கள் பிளாக் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை இஷா ரெப்பா, தமிழில், ஒய் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்,

ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள்

இந்தப் படத்துக்கு பிறகு, எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சாக்‌ஷி அகர்வால், நிகிஷா படேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்தப் படத்தை அடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X