வருது.. வருது.. தெலுங்கு லஸ்ட் ஸ்டோரி்ஸ்.. புரோமோஷன் வேலையை இன்ஸ்டாவில் தொடங்கிய பிரபல நடிகை!

ஹைதராபாத்: டோலிவுட் நடிகை ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு லஸ்ட் ஸ்டோரிஸ் விரைவில் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Recommended Video

அமலா பாலின் அடுத்த அதிரடி!

கொரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.

எந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும், தற்போது அனுமதி வழங்கப்படாத சூழலில், லஸ்ட் ஸ்டோரிஸ் குறித்த விளம்பரத்தை இன்ஸ்டாவில் லேசாக ஆரம்பித்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா.

நந்தினி ரெட்டி, தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள 4 கதைகளை கொண்டு தெலுங்கு லஸ்ட் ஸ்டோரிஸ் உருவாகி இருக்கிறது.

செம ஹிட்

செம ஹிட்

பாலிவுட்டில் கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் கஷ்யப் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் நெட்பிளிக்ஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா, புமி பெட்னேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து அசத்தியிருந்தனர்.

வேறு கதை

வேறு கதை

இந்தி மொழியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் கதையும், தெலுங்கில் உருவாகி வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் கதையும் டோட்டலாக வேறு என்று கூறப்படுகின்றன. அமலா பால், ஈஷா ரெப்பா உள்ளிட்ட 4 முக்கிய நடிகைகள், தெலுங்கு மொழியில் உருவாகி வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் படத்துக்காக நடித்துள்ளனர்.

அமலா பால்

அமலா பால்

தெலுங்கில் உருவாகி வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் ஷூட் கடந்த அக்டோபர் மாதமே முடிந்த நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது கேரக்டரும் செம போல்டாம்.

இன்ஸ்டா விளம்பரம்

அமலா பாலை தொடர்ந்து, தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பாவும் ஒரு கதையில் நடிக்கிறார். காஸி மற்றும் அந்தரிக்‌ஷம் படங்களை இயக்கிய சங்கல்ப் ரெட்டி, லஸ்ட் ஸ்டோரிஸில் வரும் 4 கதைகளில் ஈஷா ரெப்பா நடிக்கும் கதையை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள லஸ்ட் ஸ்டோரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஈஷா.

ஜி.வி. பிரகாஷ் ஜோடி

ஜி.வி. பிரகாஷ் ஜோடி

டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை ஈஷா ரெப்பா, தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் பேய் படமான ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ஷட் டவுன் காலம் முடிந்த பிறகு திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X