இந்த பொங்கல் நிதி அகர்வாலுக்கு சக்கரை பொங்கல் தான்.. ஈஸ்வரன், பூமி நாயகி இன்ஸ்டாவில் கலக்குறாங்களே!

சென்னை: வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளன்று தியேட்டரில் ஈஸ்வரன் திரைப்படமும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பூமி திரைப்படமும் வெளியாகிறது.

இரண்டு படத்திலும் சக்கரை பொங்கலாக இனிக்கவுள்ள நடிகை நிதி அகர்வால், இப்போதிலிருந்தே இன்ஸ்டாவில் ரசிகர்களை ஈர்க்கும் போட்டோக்களை போட்டு மயக்கி வருகிறார்.

டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கிய நிதி அகர்வால் இனி கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கப் போகிறார்.

போன வருஷமே

கடந்த வருடம் மே 1ம் தேதி ஜெயம் ரவியின் பூமி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போய் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

சிம்புவுக்கு ஜோடி

சிம்புவுக்கு ஜோடி

பூமி படத்தை முடித்த நிலையில், நிதி அகர்வாலுக்கு அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படத்தில் கிராமத்து பெண் லுக்கில் கலக்குகிறார் நிதி அகர்வால். நம்ம கை நம்ம கன்ட்ரோல்ல தான் இருக்கணும் ஈஸ்வரா என அவர் பேசும் டிரெண்டாகி வருகிறது.

சக்கரை பொங்கல்

சக்கரை பொங்கல்

வரும் பொங்கலுக்கு இரண்டு படங்களிலும் நிதி அகர்வால் கலக்க உள்ளதால், இந்த பொங்கலுக்கு அவர் தான் சக்கரை பொங்கலாக தியேட்டர் மற்றும் ஒடிடியில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறார். அறிமுகமே இப்படி அசத்தலாக இருப்பது எந்த நடிகைக்கும் சமீபத்தில் கிடைக்காத பாக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் ஆங்கிளில்

டாப் ஆங்கிளில்

வெறும் 875 போஸ்ட்டுகளை போட்டுள்ள நடிகை நிதி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். டோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள இவர், தினமும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார். இவரது இந்த டாப் ஆங்கிள் போட்டோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X