ஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு!

சென்னை: ஆல்பர்ட் திரையரங்கில் கோலாகலமாக ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதன் பிறகு கொரோனா கலவரத்தால் எந்தவொரு சினிமா விழாவும் நடைபெறாமல் இருந்த நிலையில், 2021 ஆரம்பத்தில் அட்டகாசமாக ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகி உள்ளது.

மாப்பிள்ளை மாதிரி

மாப்பிள்ளை மாதிரி

வேட்டி சட்டை அணிந்து கொண்டு மாப்பிள்ளை மாதிரி ரசிகர்கள் சூழ சிம்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொங்கலுக்கு தனது ரசிகர்களுக்கு சூப்பரான ஈஸ்வரன் பொங்கலை கொடுக்க தயாராகி விட்டார். கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சி நடத்தும் நிலையில், யாருமே மாஸ்க் அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவுக்கு பரிசு

பாரதிராஜாவுக்கு பரிசு

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த இயக்குநர் பாராதிராஜாவுக்கு ஈஸ்வரன் படக்குழு நினைவு பரிசாக பாரதிராஜாவின் படங்கள் அடங்கிய போட்டோ ஃபிரேமை நடிகர் சிம்பு மற்றும் சுசீந்திரன் கொடுத்துள்ளனர். பாரதிராஜா பேசும் போது, 28 நாட்களில் அதுவும் சிம்புவை வைத்து ஒரு படம் எடுப்பது ரொம்ப பெரிய விஷயம் என சுசீந்திரனை பாராட்டினார்.

கிளாமர் உடையில் நந்திதா

2021ம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில், இப்படியொரு இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு மீண்டும் சினிமா விழா இப்படி உற்சாகமாக நடைபெறுவது ரொம்பவே ஹேப்பியா இருக்கு என நடிகை நந்திதா செம கவர்ச்சியான உடையணிந்து பேசியுள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால் என்ட்ரி

ஈஸ்வரன் படத்தின் நாயகியான நடிகை நிதி அகர்வாலும் மாஸ்க் ஏதும் அணியாமல் என்ட்ரி கொடுத்தார். புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க போஸ் கொடுத்தார். நிதி அகர்வாலை சுற்றி அத்தனை ரசிகர்கள் மொய்த்துக் கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை திங்க் மியூசிக்கில் லைவ்வாக போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X