ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா.. சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: சிம்பு, நிதி அகர்வால், பாரதி ராஜா நடிப்பில் வெளிவரவுள்ள படம் ஈஸ்வரன்.

இந்த படத்தை சுசீந்திரன் எழுதி இயக்க, தமன் இசையமைக்க, பாலா கப்பா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடக்கவுள்ளது.

திரை பிரபலங்களுடன்

திரை பிரபலங்களுடன்

கொரோனா தொற்று தொடங்கி நீண்ட நாட்கள் தமிழ் சினிமா சார்ந்த எந்த விழாவும் நடக்காமல் இருந்த நிலையில் முன்னணி நடிகரான சிம்புவின் நடிப்பில் வெளிவரவுள்ள ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா திரை பிரபலங்களுடன் நடக்கவுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இசையமைப்பாளர் தமனின் இசையில் ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் இருந்து தமிழன் பாட்டு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் மீதம் உள்ள பாடல்கள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழாவின் நாயகன்

விழாவின் நாயகன்

தமன் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் இசை அமைத்து வருகிறார். தாதா சாகேப் - சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தெலுங்கு சினிமாவில் இன்றைய இசை வெளியீட்டு விழாவின் நாயகன் தமன் வென்றுள்ளது மேலும் ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

ட்ரைலர் வெளிவருமா?

ட்ரைலர் வெளிவருமா?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 அன்று வெளிவரவுள்ளது ஈஸ்வரன் திரைப்படம். இன்றைய இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு ஏதேனும் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X