அப்படிதான் பேசுவேன்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்.. நடிகை மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

Recommended Video

Bigg Boss Meera Mithun:விஜய் டிவி ஒரு Cheapபான வேலைய பாக்குறாங்க-வீடியோ

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது சென்னை போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக தமிழக அரசையும் தமிழக போலீசாரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது புகார் மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாறாக குற்றவாளிக்கு உதவுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத சென்னை போலீசாரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் டிவிட்டர் வாயிலாக புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீரா பிரஸ் மீட்

மீரா பிரஸ் மீட்

இந்நிலையில் கடந்த வாரம் நடிகை மீரா மிதுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு இல்லை

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இங்கு இருக்க முடியாத அளவுக்கு தனக்கு பிரச்சனைகள் இருப்பதாக கூறினார். தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக சாடினார்.

மும்பைதான் பாதுகாப்பு

மும்பைதான் பாதுகாப்பு

இங்கு பாதுகாப்பு இல்லாததால்தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் கூறினார். எங்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதோ அங்குதான் பாதுகாப்பு இருக்கும். மும்பையில் பாதுகாப்பாக உணருகிறேன் என்றார்.

பத்தாயிரம் லஞ்சம்

பத்தாயிரம் லஞ்சம்

மேலும் போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போலீசார் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறினார்

பேச வேண்டாம்

பேச வேண்டாம்

அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக மீரா மிதுன் பேசுவதை உணர்ந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துக்களை பேச வேண்டாம் என கூறியுள்ளனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

அதற்கு நான் அப்படிதான் பேசுவேன் என ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார் மீரா மிதுன். மேலும் ஹோட்டல் ஊழியரை தகாத வார்த்தையால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு வழக்குகள்

இரண்டு வழக்குகள்

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரை மிரட்டியதாக, ஹோட்டல் பணியாளர் அருண் என்பவர் அளித்த புகாரில் மீரா மிதுன் மீது இரண்டு பிரிவுகளில் எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X