சூர்யா, விக்ரமிற்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்சனை… ‘பிதாமகன்‘ படம் தான் காரணம் !
சென்னை : பிதாமகன் படத்திற்கு பிறகு விக்ரம், சூர்யா சேர்த்து நடிக்காததற்கு இருவருக்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்சனை தான் காரணம் என்று கோலிவிட் கிசுகிசுக்கிறது.
பாலாவின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பிதாமகன் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றத் திரைப்படமாக அமைத்து பாலாவின் புகழை உச்சாணிக்கொம்பில் ஏற்றியது.
விக்ரம்,சூர்யா, லைலா,சங்கீதா,மகாதேவன், கருணாஸ், மனோபாலா என பல நடித்திருந்தார்கள்.

பிதாமகன்
பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா, விக்ரம் என இருவருடைய நடிப்பும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது. விக்ரம் எதுவுமே பேசாமல் ஸ்கோர் செய்தார், சூர்யா அளவுக்கு அதிகமாக பேசி ஸ்கோர் செய்தார். ஆனாலும், இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தது. இதன் காரணமாக இருவருக்கு இடையேயும் ஈகோ பிரச்சினை உருவானதாக கூறப்படுகிறது.

ஈகோ பிரச்சனை
இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து என்ற திரை ப்படத்தில் நடிகர் மாதவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விக்ரம் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் சூர்யா நடிப்பது தெரிந்ததும் விக்ரம் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யா தன்னுடைய திருமணத்திற்கு அனைத்து நடிகர்களையும் அழைத்துள்ளார். நடிகர் விக்ரமை மட்டும் அவர் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று அந்த காலகட்டத்தி ல் பல பத்திரிக்கைகள் இதைப்பற்றி விமர்சித்துள்ளார்கள்.

18 ஆண்டுகளுக்குப்பிறகு
பாலாவின் படத்தில் நடிக்காத சூர்யா, பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டும் வந்து போனார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. சூர்யா இதில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கேரக்டரில் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளியாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பல திரைப்படங்களில்
விக்ரம் நடித்து வெளியான மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











