twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக் கருத்து.. பிரபல நடிகைக்கு 8 நாள் போலீஸ் கஸ்டடி!

    |

    மும்பை: நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகைக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதையும் அக்கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை பாயல்.

    ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு கூட கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    சஸ்பென்சை கொன்னுட்டாங்களே... லுங்கி டான்ஸ் லீக் ஆனதால் ஹீரோ டென்ஷன்சஸ்பென்சை கொன்னுட்டாங்களே... லுங்கி டான்ஸ் லீக் ஆனதால் ஹீரோ டென்ஷன்

    சர்ச்சைக்குரிய கருத்து

    சர்ச்சைக்குரிய கருத்து

    கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை பாயல் ரோஹத்கி. அதில், மோதிலால் நேரு மற்றும் ஜவகர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

    லால் பகதூர் சாஸ்திரி

    லால் பகதூர் சாஸ்திரி

    அதேபோல் ஜவகர் லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரபரப்பியதாகவும் கூறப்பட்டது. மேலும் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துகளையும் நடிகை பாயல் ரோஹத்கி வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது.

    நேற்று கைது

    இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாநில போலீசார் நடிகை ரோஹத்கி பாயலை நேற்று காலை கைது செய்தனர். இதனை பாயல் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

    8 நாட்கள் கஸ்டடி

    இந்நிலையில் நடிகை பாயல் ரோஹத்கி, பண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Bundi court sends Actress Payal Rohatgi for eight days judicial custody. Paya Rohatgi was arrested by Police over her comment on former Prime Minister Pandit Jawaharlal Nehru.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X