ஏலே, பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான்.. வரும் 12 ஆம் தேதி 8 படங்கள் ரிலீஸ்?

By

சென்னை: வரும் 12 ஆம் தேதி எட்டு படங்கள் வரை ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த வருடத்தின் மிகப்பெரிய கொடுமை, கொரோனா. இந்த உயிர்கொல்லி வைரஸால் மொத்த உலகமும் அச்சத்தில் உறைந்தது.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுள்ள நிலையில், அடுத்த வகை கொரோனா உருவாகி மீண்டும் பீதியை கிளப்பி இருக்கிறது.

தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

இந்த கொரோனாவால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. தொடர்ந்து அது பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் ஒன்று.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

தியேட்டர்கள் திறக்கப்படாததால், சில தயாரிப்பாளர்கள் ஓடிடியில் படங்களை வெளியிட்டனர். இதில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று அரசு, தியேட்டர்களை திறக்க சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது. குறைவான ரசிகர்களே வந்ததால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

8 படங்கள் ரிலீஸ்

8 படங்கள் ரிலீஸ்

இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் படம் திரையுலகினர் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தப் படம் நல்ல வசூலை பெற்றதால், தொடர்ந்து படங்கள் ரிலீஸ் ஆகிவருகின்றன. இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. கொரோனாவுக்கு முன், வாரத்துக்கு 6 முதல் 10 படங்கள் வெளியாகி வந்தன.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

கொரோனாவுக்கு பிறகு இந்த நிலை மாறியது. குறைவான படங்களே வெளியான நிலையில் இந்த வாரம் எட்டு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள ஏலே ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

பாரிஸ் ஜெயராஜ்

பாரிஸ் ஜெயராஜ்

தினேஷ் நடித்துள்ள நானும் சிங்கிள்தான், சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ், கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதுதவிர மேலும் 2 படங்கள் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X