»   »  இந்திராணி கதையை கையில் எடுத்த ராக்கி சாவந்த்!

இந்திராணி கதையை கையில் எடுத்த ராக்கி சாவந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்குரிய இந்திராணி முகர்ஜி கதையை படமாக்குகிறார். அவரே இந்திராணி வேடத்திலும் நடிக்கிறாராம். படத்திற்கு ஏக் கஹானி ஜூலி கி என்றும் பெயரிட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் மகேஷ் பட், ஷீனா போரா கொலை வழக்கைப் படமாக்கப் போவதாக கூறியிருந்த நிலையில் ராக்கி அதிரடியாக இந்திராணி கதையை படமாக்கக் கிளம்பி விட்டார்.

இப்படத்தின் ஷூட்டிங்கையும் ராக்கி சாவந்த் ஏற்கனவே ஆரம்பித்து விட்டாராம். எனவே படத்தை முடித்து விரைவில் வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

சிக்கியுள்ள அம்மா, மகள்:

சிக்கியுள்ள அம்மா, மகள்:

நிஜக் கதையை அதுவும் பரபரப்பான கதை என்றால் உடனே படமாக்குவது இந்தியத் திரையுலகின் இயல்பாகும். தற்போது அவர்களிடம் இந்திராணியும், ஷீனாவும் சிக்கியுள்ளனர்.

மகேஷ் பட்டின் முடிவு:

மகேஷ் பட்டின் முடிவு:

மகேஷ் பட் ஏற்கனவே ஷீனா போரா கொலையை படமாக்குவது குறித்து யோசித்து வருவதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தை மொத்தமாக படமாக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் ராக்கி சாவந்த் அதிரடியாக களம் இறங்கி விட்டார். அவர் இந்திராணி முகர்ஜி கதையை கையில் எடுத்து களத்திலும் குதித்து விட்டார்.

இந்திராணியின் வாழ்க்கை:

இந்திராணியின் வாழ்க்கை:

இதுகுறித்து ராக்கி கூறுகையில், "நான் எடுக்கும் படம் இந்திராணி முகர்ஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். அவரது வாழ்க்கை என்னை ஆர்வப்படுத்தி விட்டது. படமெடுக்க தூண்டி விட்டுள்ளது.

அவர் என்னுடைய நெருங்கிய தோழி:

அவர் என்னுடைய நெருங்கிய தோழி:

மேலும் இந்திராணி எனது நெருங்கிய தோழியும் கூட. பல வருடமாக இருவரும் பழகி வருகிறோம். அவரது சேனலில் நான் 2 ரியாலிட்டி ஷோக்களில் வெற்றியும் பெற்றுள்ளேன். நிறைய பரிசுகளும் பெற்றுள்ளேன்.

எல்லாரையும் தெரியும்:

எல்லாரையும் தெரியும்:

இந்திராணியையும் தெரியும், அவரது கணவர் பீட்டரையம் தெரியும். ஷீனாவையும் கூட எனக்கு தெரியும். எனவேதான் இந்தக் கதையை நான் படமாக்குவது பொருத்தமாக அமையும்" என்றார் ராக்கி.

ஷீனா அவர் மகளா?:

ஷீனா அவர் மகளா?:

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு முதலில் இந்திராணி கைது அதிர்ச்சியைக் கொடுத்தது. நானும் கூட ஷீனாவை அவரது மகள் என்று கருதவில்லை. ஆனால் செய்திகளைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். நம்பவே முடியவில்லை.

அவரது அம்மா எனத் தெரியாது:

அவரது அம்மா எனத் தெரியாது:

என்னைப் போலவே ஷீனாவையும் அவர் மிகவும் நேசித்தார். மிகவும் அன்பு செலுத்தினார். அவரை நான் இந்திராணியின் தங்கை என்றுதான் நினைத்திருந்தேன். ஷீனாவும் இந்திராணியை அக்கா என்றுதான் அழைப்பார்.

ஆராய்ச்சி செய்து மாற்றியிருக்கின்றேன்:

ஆராய்ச்சி செய்து மாற்றியிருக்கின்றேன்:

முதலில் எனது படத்தை நான் ஜூலி என்ற கதாபாத்திரத்தையும், அவரது 3 காதலர்களையும் மையப்படுத்தி வைத்திருந்தேன். தற்போது அதை இந்திராணியும், அவரது மூன்று கணவர்களும் என்று மாற்றி விட்டேன். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்து கதையை மாற்றியுள்ளோம்" என்றார் ராக்கி.

English summary
While Mahesh Bhatt claimed that he's scripting a story on the Sheena Bora case, Rakhi Sawant has already begun shooting for her next, 'Ek Kahaani Julie Ki', which is apparently inspired by Indrani Mukerjea's life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil