நாளை ஜப்பானில் ஏக் தா டைகர் ரிலீஸ்: ரஜினியை முந்துவாரா சல்மான் கான்?
மும்பை: சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் ஜப்பானிய மொழியில் நாளை ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைப் நடித்த படம் ஏக் தா டைகர். உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்தது. இதற்கு முன்பு ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படம் ரூ. 310 கோடி வசூல் செய்தது.
சுதந்திர தினத்தன்று ரிலீஸான ஏக் தா டைகர் படத்தில் ரா ஏஜெண்டான சல்மான் கான் ஐஎஸ்ஐ ஏஜெண்டான கத்ரீனா கைபை காதலிப்பார். இந்த படம் மூலம் தான் வசூல் மன்னன் என்பதை மறுபடியும் நிரூபித்தார் சல்மான் கான்.

மார்ச் 7ல் ஜப்பானில் ஏக் தா டைகர் ரிலீஸ்
ஏக் தா டைகர் படம் ஜப்பானிய மொழியில் நாளை ஜப்பான் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

ஜப்பான்னா ரஜினி தான்
ஜப்பான் மக்கள் என்றைக்கு முத்து படத்தைப் பார்த்தார்களோ அந்த நாளில் இருந்து இதுவரை அங்கு பிரபலமாக உள்ள ஒரே இந்திய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ரஜினியை முந்துவாரா சல்மான்?
ரஜினிகாந்த் பிரபலமாக உள்ள ஜப்பானில் பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் சல்மான் கானின் ஏக் தா டைகர் ரிலீஸ் ஆகிறது. ஜப்பான் மக்கள் மனதில் சல்மான் இடம் பிடிப்பாரா?


Click it and Unblock the Notifications











