twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 நாட்களில் 'ரூ.100 கோடி' வசூல்: ஏக் தா டைகர் புதிய இந்திய சாதனை

    By Siva
    |

    டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.

    இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

    நேற்றுடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Salman Khan's Ek Tha Tiger, the romantic action thriller has shattered all previous collection records by raking in Rs.100 crores in just five days. It has become the first hindi movie to touch Rs.100 crore in 5 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X