ஆபாச காட்சிகள்.. ராணுவ வீரர்களை அவமதித்தாக வழக்கு.. ஒரு வழியாக மெளனம் கலைத்தார் ஏக்தா கபூர்

மும்பை: இந்தி சீரியல்கள் மற்றும் பாலிவுட் படங்களை தயாரித்து வரும் ஏக்தா கபூர், தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றியும், விமர்சனங்கள் குறித்தும் முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.

பாலாஜி டெலி ஃபிலிம்ஸில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு ஆல்ட் பாலாஜி எனும் வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஏக்தா கபூர்.

நடிகர் ஜீத்தேந்த்ரா மற்றும் சோபா கபூரின் மகளான ஏக்தா கபூர், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

45 வயது

45 வயது

தனது 15ம் வயதிலேயே தயாரிப்பாளராக தலையெடுத்த ஏக்தா கபூர் இன்று தனது 45வது பிறந்தநாலை கொண்டாடி வருகிறார். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் மூலம் ஏகப்பட்ட டிவி சீரியல்களையும், சினிமா படங்களையும் தயாரித்துள்ளார். 2001ம் ஆண்டு கோவிந்தா, அனுபம் கெர் நடிப்பில் வெளியான கியோ கி.. மெயின் ஜோத் நஹி போல்டா படத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியான ட்ரீம் கேர்ள் வரை எண்ணற்ற படங்களை இவரது நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

அந்த மாதிரியான படங்கள்

அந்த மாதிரியான படங்கள்

வெப்சீரிஸ்களில் மட்டுமின்றி, திரைப்படங்களிலேயே அந்த பாதிரியான கிளாமர் படங்களை தான் அதிகளவில் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார் என்பது பாலிவுட் உலகம் நன்றாகவே அறிந்த ஒரு விசயம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர், சன்னி லியோனின் ராகினி எம்.எம்.எஸ் 2, லவ் செக்ஸ் அவுர் தேக்கோ, ஹாஃப் கேர்ள் பிரெண்ட் என பல கவர்ச்சி படங்களை தயாரித்துள்ளார்.

ஆபாச வெப்சீரிஸ்

ஆபாச வெப்சீரிஸ்

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆல்ட் பாலாஜி எனும் தயாரிப்பு கிளை நிறுவனத்தை தொடங்கி வெப்சீரிஸ் உலகிலும் காலடி பதித்துள்ளார். திரைப்படங்களிலேயே கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஏக்தா கபூர், வெப்சீரிஸ் விஷயத்தில் சொல்லவா வேண்டும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட கில்மா வெப்சீரிஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான டிரிபிள் எக்ஸ் சீசன் 2 எனும் வெப்சீரிஸில் இந்திய ராணுவ வீரர்களின் உடையை கிழித்து, கள்ளத்தனமாக வேறு ஒருவருடன் ஒரு பெண் செக்ஸ் வைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய அளவில் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தொடரப்பட்ட வழக்குகள்

தொடரப்பட்ட வழக்குகள்

பிக்பாஸ் போட்டியாளரான இந்துஸ்தானி பாவ் என்பவர் ஏக்தா கபூரின் டிரிபிள் எக்ஸ் சீசன் 2 வெப்சீரிஸ் குறித்து பேசி கிழித்து தொங்கவிட்டு, இப்படியா இந்திய ராணுவ வீரர்களையும், ராணுவ உடையையும் அசிங்கப்படுத்துவீங்க என ஏக்தா கபூர் மீதும், அவரது அம்மா சோபா கபூர் மீதும் வழக்கு தொடர்ந்தார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டி.சி. ராவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெளனம் கலைத்தார்

மெளனம் கலைத்தார்

இந்தியளவில் சமீபத்தில் ஆல்ட் பாலஜி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்றும், இது போன்ற ஆபாச வெப்சீரிஸ்களுக்கு தணிக்கை வேண்டும் என்றும் டிரெண்ட் செய்யப்பட்டது குறித்தும் தன் மீதும் தனது அம்மா மீதும் தொடர பட்டுள்ள வழக்குகள் குறித்து, மெளனம் கலைத்து தற்போது பதில் அளித்துள்ளார் ஏக்தா கபூர்.

காட்சி நீக்கம்

காட்சி நீக்கம்

இந்திய ராணுவ வீரர்கள் மீது தான் மிகவும் மரியாதை கொண்டிருப்பதாகவும், வெப்சீரிஸில் இடம்பெற்ற அந்த காட்சி குறித்த தகவல் தெரிந்தவுடன் அதனை நீக்கி விட்டதாகவும், அந்த காட்சியால் யார் மனதேனும் புண்பட்டு இருந்தால், ஆல்ட் பாலாஜி நிறுவனம் சார்பாக தான் மன்னிப்பு கோருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பலாத்கார மிரட்டல்

பலாத்கார மிரட்டல்

ஆனால், தனக்கும் தனது தாய்க்கும் கமெண்ட்டுகளில் பலாத்கார மிரட்டல்களும், கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியும், ஆபாசமாக சித்தரித்து மீம் மற்றும் ட்ரோல் செய்வதையும் தான் சகித்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்றும், தனது ஹேட்டர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X