பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீடு, பாலாஜி டெலிபிலிம்ஸில் ஐடி ரெய்ட்: மும்பையில் பரபரப்பு
மும்பை: மும்பையில் உள்ள நாட்டின் மிகப் பெரிய படம் மற்றும் டிவி தொடர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பாலாஜி டெலிபிலிம்ஸ். அதன் உரிமையாளர்களான ஏக்தா கபூர், அவரது தந்தை மற்றும் சகோதரரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் பாலாஜி டெலிபிலிம்ஸ். மும்பையில் உள்ள பாலாஜி டெலிபிலிம்ஸ் அலுவலகம், அதன் உரிமையாளர்களான ஏக்தா கபூர், அவரது தந்தையும், நடிகருமான ஜிதேந்திரா, சகோதரரும், நடிகருமான துஷார் கபூர் ஆகியோரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஏக்தாவின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறையினர் அதிகாலை 6 மணிக்கே சோதனையை துவங்கியுள்ளனர். சுமார் 100 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். ஏக்தா கபூர் வருமான வரி மோசடி செய்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்துள்ளது.
பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்த 'ஏக் தி தாயான்' இந்தி படம் கடந்த 19ம் தேதி ரிலீஸாகியுள்ள நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











