திருமணமாகாமல் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகரின் மகள்

By Siva

மும்பை: பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருபவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள். 43 வயதாகும் ஏக்தாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று கூறப்படுகிறது.

 ஏக்தா கபூர்

ஏக்தா கபூர்

ஏக்தா கபூருக்கு ஒரு குழந்தைக்கு தாயாகும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து வாடகை தாய் மூலம் அவர் தாயாகியுள்ளார். கடந்த 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. விரைவில் அவர் குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

வாழ்த்து

வாழ்த்து

ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ள ஏக்தா கபூருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏக்தா நல்ல முடிவு எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 துஷார் கபூர்

துஷார் கபூர்

முன்னதாக ஏக்தாவின் தம்பியும், நடிகருமான துஷார் கபூர் வாடகை தாய் மூலம் லக்ஷ்யா என்ற மகனுக்கு அப்பா ஆனார். இந்நிலையில் ஏக்தாவும் தம்பி வழியை பின்பற்றியுள்ளார். துஷாருக்கும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 வாடகை தாய்

வாடகை தாய்

பாலிவுட் பிரபலங்கள் வாடகை தாய் மூலம் பெற்றோர் ஆவது அதிகரித்து வருகிறது. நடிகர்கள் ஆமீர் கான், ஷாருக்கான், இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சன்னி லியோன் ஆகியோரும் வாடகை தாய் மூலம் பெற்றோர் ஆனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X