இளசுகளை இன்றும் குத்தாட்டம் போடவைக்கும் இளமை இதோ இதோ.. 35 ஆண்டுகளாக ஹிட்!
சென்னை : புத்தாண்டு என்றால் ஹிட்டடிக்கும் ஒரே பாடல் இளமை இதோ இதோ பாடல் தான். இளசுகள் முதல் பெரிசுகள் வரை குத்தாட்டம் போட வைத்துவிடுகிறது இந்த பாடல்.
நாளை பிறக்கப்போகிறது புத்தாண்டு. இந்த புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். கேக்குகள், இனிப்புகள் என புத்தாண்டு களைகட்டத் தொடங்கிவிட்டது. கடற்கரை, ஹோட்டல்கள் என அனைத்து வண்ண விளக்குகளால் மின்னி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

குத்தாட்டம் போடுவதற்கும், கூட்டு சேர்த்து ஆடுவதற்கும் பாடல்களை தேடி வரும் இளசுகள் முதலில் தேர்வு செய்வது இளமை இதோ இதோ பாடலைத்தான். இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்துவிடும் இந்த பாடல். தமிழ் சினிமாவில் புத்தாண்டு பற்றி பல நூறு பாடல்கள் வந்தாலும் தனக்கென்று நீங்கா இடம் பிடித்த ஒரே ஒரு பாடல் என்ற இந்த பாடலுக்கு உண்டு.

ஒரு வருடத்தில் பல படங்கள் ஹிட், பல பாடல்கள் ஹிட் ஆனால் புத்தாண்டு என்றால் என்றும் எப்போதும் ஹிட்டான ஒரே பாடல் இளமை இதோ இதோ பாடல் தான், இந்த பாட்டுக்கு ஈடு இணையாக இதுவரை எந்த பாடலும் வரவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த பாட்டு நம் மனத்தை ஆக்ரமித்துள்ளது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் இல்லாமல் புத்தாண்டை நாம் கொண்டாடப் போவது இல்லை. சுமார் 35 வருடங்களாக தொலைக்காட்சிகள், ரேடியோகளில் கேட்டு கேட்டு பழகிப்போன பாடல்தான் என்றாலும், புத்தாண்டு என்றால் இந்த பாடல் தான் ஸ்பெஷல்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற பாடலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடி அசத்தி இருப்பார். 'ஹலோ எவரிப்பாடி விஸ் யு ஹாப்பி நியூயர்' வசனத்தில் புல்லட்டின் பின்னணியில் ஒளிக்கும் ஓசை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்துவிடுகிறது.
ஆண்டுகள் பல சென்றலும் இந்த பாடலுக்கு இருக்கும் மசுவுசே தனிதான். ஒரு பாடலால் இத்தனை சாதனை படைக்க முடியுமா என்றால், முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த பாடல். இன்னும் எத்தனை பாடல்கள் வந்தாலும் இது போன்ற ஒரு பாடல் இயற்றிய சாதனையை எந்த பாடலாலும் இயற்ற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











