என்ன வலிமை அப்டேட்டை தேர்தல் ஆணையம் வெளியிடுது.. வைரலாகும் போஸ்டர்.. அப்செட்டில் அஜித் ரசிகர்கள்!

சென்னை: மார்ச் மாதம் முதல் வாரத்தில் வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

ஆனால், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள தேர்தல் ஆணையம் தற்போது 'வலிமை' என்கிற வார்த்தையை கையில் எடுத்து வெளியிட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதோ தேர்தல் ஆணையம் வலிமை அப்டேட் விட்டுட்டாங்கன்னு ஏகப்பட்ட தல ரசிகர்களே அந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.

500 நாட்களை கடந்து

500 நாட்களை கடந்து

வலிமை படத்திற்கு பூஜை போட்டு டைட்டில் அறிவித்து 500 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கூட படக்குழு வெளியிடவில்லை. தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு பண்ண அலப்பறையை பார்த்த போனி கபூர் மற்றும் அஜித் குமார் சீக்கிரமே அப்டேட் வரும் என்று கூறியிருந்தனர்.

டிரெண்டான அஜித்

டிரெண்டான அஜித்

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இறுதிக்குள் வெளியாகி விடும், மார்ச் முதல் வாரத்தில் வெளியாகி விடும் என நினைத்து கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் ஆரம்பித்தனர். ரசிகர்களுக்காக, அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள், ஷாலினியுடன் செல்ஃபி எடுத்தது, துப்பாக்கிச் சுடுதலில் கலந்து கொண்டது. கமிஷனர் ஆபிஸ் சென்றது என ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர்.

6 மெடல்கள்

6 மெடல்கள்

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித் மற்றும் அவரது குழுவினர் இணைந்து மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் இரண்டு தங்க பதக்கமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராஃபி, குக்கிங், டிரோன் என கலக்கி வந்த தல அஜித் அடுத்த கட்டமாக துப்பாக்கி சுடுதலிலும் அசத்திய நிகழ்வும் தல ரசிகர்களை வலிமை படத்தின் அப்டேட்டை கேட்பதில் இருந்தே மறக்கடிக்க செய்து விட்டது.

தேர்தலில் வலிமை

தேர்தலில் வலிமை

ஒவ்வொரு ஆண்டும் மக்களை ஈர்க்கும் விதமாகவும் இளைஞர்களை கவரும் விதமாகவும் புதிய புதிய வாசகங்களோடு தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும். அதே போல இந்த ஆண்டுக்கான வாசகமாக 'வலிமை' - ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது. தேர்தல் நாள் ஏப்ரல் 6 என புரமோஷனை ஆரம்பித்துள்ளது.

வலிமை அப்டேட் வந்துடுச்சு

வலிமை அப்டேட் வந்துடுச்சு

இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இதோ வலிமை அப்டேட் வந்துடுச்சு, தேர்தல் ஆணையமே தல அஜித்தின் வலிமை படத்தின் டைட்டிலை வைத்துத் தான் விளம்பரம் செய்துள்ளனர். இதுவும் வலிமை படத்திற்கு ஒரு புரமோஷனாகவே அமைந்துள்ளது என ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல் படுத்தி வருகின்றனர். பத்து நாள்ல படத்தோட ஷூட்டிங்கையே சிலர் முடித்து விடுகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ண ஏன் இவ்ளோ தாமதம்ன்னு தெரியலையே?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X