தேர்தல் விதிமீறல் வழக்கு: நடிகை குஷ்பு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்
திண்டுக்கல்: தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை குஷ்பு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் திமுக சார்பில் விஜயனும், அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதனும் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். அதேபோல நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் விஜயனுக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி நத்தம் ரவுண்டானா அருகே அவர் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தின்போது அதிக ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததுடன் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகக் கூறி அவர் மீது நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆஜராக அவர் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றார். அங்கிருந்து காரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில் இந்த வழக்கு அடுத்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











