’எலக்சன்’ படத்துல டீட்டெய்லே இல்லை.. தேவையில்லாத ரொமான்ஸ்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் 'உறியடி' விஜய் குமார் நடித்த எலக்சன் திரைப்படம் நேற்று வெளியானது. சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு' படத்தை எப்படி கழுவி ஊற்றியிருந்தாரோ ப்ளூ சட்டை மாறன் அதே நிலைமை தான் இந்த படத்துக்கும்.
உறியடி படத்தை இயக்கி ஹீரோவாக நடித்த விஜய் குமார் உறியடி 2 திரைப்படத்தையும் இயக்கி நடித்திருந்தார். ஆனால் முதல் படத்தைப் போல இரண்டாவது படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ஃபைட் கிளப் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அந்தப் படமும் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த வாரம் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரிய்ன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான எலக்சன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஒரே அரசியல்: நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் படங்கள் தான் ஓடும் என்கிற எண்ணத்தில் பல தயாரிப்பாளர்கள் அரசியல் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். செய்தி சேனலை திறந்தால் தான் ஒரே அரசியலாக இருக்கிறது சினிமாவில் ஜாலியாக படம் பார்த்து போகலாம் என நினைத்த ரசிகர்களுக்கு அங்கேயும் அரசியல் படங்களாகவே குவிந்தால் என்ன செய்வார்கள் என்கிற கேள்விதான் எழுகிறது. எலக்சன் திரைப்படத்துக்கு வழக்கம் போல ப்ளூ சட்டை மாடல் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வெளியான சேர்த்து மார்க் திரைப்படம் டீட்டெய்லாக இருந்ததாகவும் ஆனால், இந்த எலக்சன் திரைப்படம் மேம்போக்கான அரசியலை பேசுகிறதே தவிர ஆழமான கருத்துக்களுடன் படம் உருவாகவில்லை என்றும் அதுவே ஒரு கட்டத்தில் படத்திற்குள் ரசிகர்களை ஒன்றை வைக்க தவறுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேவையற்ற ரொமான்ஸ்: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்தால் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும் ஒன்ஸ்மோர் எல்லாம் கேட்பார்கள். ஆனால் சமீப காலமாக திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படத்தின் கதையை விட்டு வேறு எங்கோ நகர்ந்து விட்டு மீண்டும் கதைக்குள் வந்தால் கதைக்குள் நுழைய முடியாமல் தனித்து விடப்பட்ட உணர்வே மிஞ்சுகிறது. கமர்ஷியல் படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் முதல் பாதியிலேயே நான்கு பாடல்களை வைத்து படத்தை படுக்க வைத்து விட்டார் இயக்குநர் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
ஹாட்ரிக் தோல்வி: உறியடி 2, ஃபைட் கிளப் படங்களை தொடர்ந்து விஜய் குமாருக்கு இந்த படமும் வெற்றிப் படமாக அமையவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய் குமாரே இயக்கி நடித்தால் நிச்சயம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் ஜார்ஜ் மரியன் நடிப்பு சிறப்பு என்றும் பல காட்சிகள் விஷுவலாக இல்லாமல் வசனங்களாக நகர்வது படத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை காட்டுவதாக கூறுகின்றனர். இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான இங்க நான் தான் கிங்கு மற்றும் எலக்சன் உள்ளிட்ட இரண்டு படங்களும் சுமார் ரகம் தான்.


Click it and Unblock the Notifications











