"அங்க ஒரு குத்து.. இங்க ஒரு குத்து.. அதனாடா".. தீயாய் பரவும் தேர்தல் ட்ரோல்!
சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் ட்ரோல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு தொடர்பான வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர்கள் வடிவேலு மற்றும் முத்துக்காளை ஆகியோர் இணைந்து நடித்த அன்பு படத்தில் இடம்பெற்ற காட்சிதான் அது. அந்த காமெடியில் முத்துக்காளை, கேட்பவர்களிடமெல்லாம் உங்களுக்குதான் ஓட்டு போட்டேன், உங்களுக்குதான் ஓட்டு போட்டேன் என்று காசை வாங்கிக்கொண்டு செல்லாத ஓட்டை போடுவார்.
இருவரிடமும் காசு வாங்கியதால் அங்க ஒரு குத்து இங்க ஒரு குத்து என செல்லாத ஓட்டுக்களை போடுவார் முத்துக்காளை. இதனைக் கேட்ட நடிகர் வடிவேலு இந்தா நான் மூன்றாவது ஒரு குத்து குத்துகிறேன் என வெளுத்தெடுப்பார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் தமிழக மக்களின் நிலை இப்போது இப்படிதான் உள்ளது என கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











