திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் எப்போது? இயக்குநர் ஆர்கே செல்வமணி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என இயக்குநர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி 2019 - 2021 ஆம் ஆண்டுக்கு தேர்தல் நடத்துவதற்கான முடிவு சங்கத்தின் 99-வது பொதுக் குழுவில் எடுக்கப்பட்டது. இதில் ஒருமனதாக பாரதிராஜா அண்மையில் இயக்குநர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Election will be held for Tamilnadu cinema Directors Association O 23rd of This month

மற்ற பதவிகளுக்கு போட்டியிடுபவர்களின் பட்டியல் கடந்த மூன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா விலகி விட்டார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ந்தேதி நடைபெறும் என்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X