»   »  30ம் தேதி நடிகர் சங்க தேர்தல்

30ம் தேதி நடிகர் சங்க தேர்தல்

Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் தற்போது உள்ளார். துணைத் தலைவராகசரத்குமார் உள்ளார். சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல்நடத்தப்பட வேண்டியுள்ளது.


தலைவர் பதவிக்கு விஜயகாந்த் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை எனத்தெரிகிறது. அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நடிகர், நடிகைகளிடையேஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையில் இன்று நடிகர் சங்க பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர்கள் நெப்போலியன், விஜயக்குமார்,ராதாரவி, செந்தில், முரளி உள்ளிட்டோரும், நடிகை மனோரமா உள்ளிட்டநடிகைகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் நடிகர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் எப்போது தொடங்கும் என்பது உள்ளிட்ட பிற விவரங்கள்பின்னர் அறிவிக்கப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டி கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது என்றார். தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த நடிகர்சரத்குமார் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பிரபு, சத்யராஜ், சரத்குமார்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil