அடிபொலி!.. தமன்னாவே தோத்துடுவாங்க.. காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடும் யானை.. ஆனால், ட்விஸ்ட் இருக்கு!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவான காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்நிலையில் அந்தப் பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடுவது போன்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

அதுவும் உங்க வீட்டு நடனம் எங்க வீட்டு நடனம் எல்லாம் இல்லை இரண்டு கால்களையும் தாறுமாறாக அசைத்து சாய்ந்து ஸ்டெப் எல்லாம் போட்டு ஆடி இருக்கும் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Elephant doll dances for Jailer Kaavaala song like Tamannah Bhatia video goes trending

தமன்னா தாறுமாறு டான்ஸ்: எந்திரன் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான், 2.0, கபாலி, காலா, தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கவில்லை. இதில், தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் படம் வருகிறது. அதுவும் பீஸ்ட் படத்தை கொடுத்த நெல்சன் இயக்குகிறார் என்றதும் கடைசிவரை ரசிகர்களுக்கு பெரிதாக ஹைப் ஏதும் இல்லை. ஆனால், அனிருத் இசையில் தமன்னாவின் தாறுமாறான நடனத்தில் வெளியான காவலா பாடல் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுத்தந்தது.

600 கோடி பாக்ஸ் ஆபீஸ்: பீஸ்ட் படம் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறிய நிலையில், தன்னை நம்பி பணம் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சம்பவத்தை செய்ய வேண்டும் என நினைத்த நெல்சன் ஜெயிலர் படத்தின் மூலம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டி கொடுத்து மிகப்பெரிய மகிழ்ச்சியை ரஜினிகாந்துக்கும் ரசிகர்களுக்கும் கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் தாண்டி அனிருத்தின் பாடல்கள் பெரும் பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் வெற்றி விழாவில் அதைக் குறிப்பிட்டு அனிருத்தை பாராட்டி இருந்தார்.

காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடும் யானை: சிம்ரன் முதல் பல நடிகைகளின் முகங்களை ஏஐ மூலம் மாற்றி தமன்னா ஆடியோ வீடியோவுக்கு டான்ஸ் ஆடியது போல ரீல்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகின. அதைத் தாண்டி பல நடிகைகளும் அந்த பாடலுக்கு நிஜமாகவே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர். இந்நிலையில், காவாலா பாட்டுக்கு காட்டு யானை ஒன்று நடுரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.

யானையே கிடையாது: யானை கெட்டப்பில் வீடியோவை ரெடி பண்ண புத்திசாலிகள் ஓவராக ஸ்டெப் போட்டு மண்டைக்கு மேல் இருந்த கொண்டையை மறைக்காமல் மறந்து விட்டனர். பொம்மை யானை உருவத்துக்குள் நடனக் கலைஞர்கள் இருந்துக் கொண்டு நடனமாடும் வீடியோ தான் அது என்பதை ரசிகர்கள் பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடித்து விட்டனர். ஆனாலும், யானை டான்ஸ் ஆடுவது போன்று அவர்கள் செட்டப் செய்து செட்டப் செல்லப்பாவாக மாறியதை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து அந்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

வேட்டையன் படத்திலும் வெயிட்டா இருக்கு: ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கும் அனிருத் தான் இசை. இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங் துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கொத்தா படத்தில் குத்தாட்டம் போட்டதை விடவும் பெட்டராக வேட்டையன் படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X