வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை

By Siva

Recommended Video

புலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு- வீடியோ

சென்னை: வடிவேலுவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

24ம் புலிகேசி படத்தில் இருந்து வெளியேறிய வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கேட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் சமரசம் பேசியும் பலனில்லை.

இந்நிலையில் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

சட்டம்

சட்டம்

ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்காமல் ஷங்கரை சட்டப்படி சந்திக்கும் முடிவில் இருந்த வடிவேலு தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் இறங்கி வராவிட்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்ததாம்.

எலி

எலி

புலிகேசி பிரச்சனை ஓய்ந்த கையோடு எலி பட பிரச்சனையில் சிக்கியுள்ளார் வடிவேலு. யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்த எலி படம் கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸாகி பிளாப் ஆனது.

நஷ்டம்

நஷ்டம்

எலி படம் ஓடாததால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார். முன்னதாக படத்தை தயாரிக்க வடிவேலுவின் பரிந்துரையில் சதீஷ் குமாருக்கு ராம் குமார் என்பவர் ரூ. 1.5 கோடி கடன் கொடுத்துள்ளார். சதீஷ் அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ. 2 கோடி கொடுக்கவில்லை.

தலைமறைவு

தலைமறைவு

ராம்குமார் வடிவேலு மற்றும் சதீஷ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். கோலிவுட்டில் பெயரை கெடுத்துக் கொண்டாலும் அவரை திரையில் பார்க்கும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X