மோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை?
வடிவேலு நடித்த எலி திரைப்படத்தில் தயாரிப்பாளர் சதீஷ், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.
வடிவேலு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் எலி. யுவன் தயாளன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை சதீஷ்குமார் என்பவர் தயாரித்து இருந்தார். இதற்காக வடிவேலு பரிந்துரையின் பேரில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராம்குமார் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

மொத்த தொகையாக 2 கோடி ரூபாய் திருப்பித் தருவதாகக் கூறிய சதீஷ்குமார், தற்போது வரை பணம் எதுவும் கொடுக்கவில்லை என கடந்த பிப்ரவரியில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ராம்குமார் புகார் அளித்தார்.
இதை அடுத்து சதீஷ்குமார் தலைமறைவானார். சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பணத்துக்கு உத்தரவாதம் கொடுத்த வடிவேலுவை போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மதுரை அருகே தலைமறைவாக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











