Don't Miss!
- News
"என்ன தைரியம் இருந்தா.. எங்க பொண்ணை கட்டுவா!" வீடு புகுந்து மணமகன் முன் பெண் வீட்டார் செய்த கொடூரம்
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடேங்கப்பா..பிக் பாஸ் வீட்டில் ஜனனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜனனி வாங்கிய சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு சம்பளமா என வாயடைத்து போய் உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் ஜிபி முத்து தானாக முதல் வாரமே வெளியேறினார்.
அதன்பின் மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார், ஷெரினா, ஷிவானி, மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ராம் ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று ஜனனி வெளியேறினார்
பிக் பாஸ் சீசன் 6: விக்ரமன், அசீம், ஷிவினை சும்மா வச்சு செய்யும் மீம்ஸ்.. வெல்லப் போவது யாரு?

ஜனனி
இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜனனி மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துடிப்பாகவே இருந்தார். அதன் பின் இலங்கை சேனலில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜனனி, ஏராளமான ரசிகர்களை வளைத்துப் போட்டார்.

குட்டி த்ரிஷா
ஜனனி உள்ளே வந்ததும் ரசிகர்கள் ஆர்மிகளை உருவாக்கி தெறிக்கவிட்டனர். அவரின் டிக்டாக் வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினார்கள். நம்ம டிக்டாக் புகழ் ஜிபிமுத்துக்கு அடுத்து அதிகளவில் ஆர்மி ஜனனிக்குத்தான் உருவானது. த்ரிஷாவின் தீவிர ரசிகையான ஜனனியை அவரது ரசிகர்கள் குட்டி த்ரிஷா என செல்லமாக அனைத்து வருகின்றனர்.

கடுப்பானார்கள்
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் கவனத்தோடு விளையாடிக் கொண்டிருந்த ஜனனி நாட்கள் செல்ல விளையாட்டை ஏனோதானே என விளையாடினார். அது மட்டும் இல்லாமல் வீட்டில் சிறியவராக இருந்தாலும், பல போட்டியாளர்களிடம் அவர் மரியாதைக்குறைவாகவே பேசி வந்தார். குறிப்பாக அமுதவாணன் என்ன சொன்னாலும் அதை அப்படியே செயல்படுத்தி வந்தால், போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் பார்வையாளர்களும் கடுப்பானார்கள்.

ஜனனியை கண்டித்த கமல்
அதே போல அமுதவாணன், தனலட்சுமி, ஜனனி ஆகியோர் குரூப்பாக சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள் இது பார்ப்பதற்கு கடுப்பாகவே இருந்தது. நாமினேஷனில் ஒருவரை ஒருவர் கலந்து பேசி தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேட் செய்ததையும் கமல்ஹாசன் சனிக்கிழமை சுட்டிக்காட்டி கண்டித்திருந்தார். போன வாரமே ஆயிஷாவுடன் ஹாட் சீட்டில் இருந்த ஜனனியை ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றினார்கள்.

ஜனனி வெளியேறினார்
இந்த வாரம், அசீம், விக்ரமன்,கதிர், ஜனனி,ஏடிகே போன்றோர் நாமினேஷன் ஆனார்கள். இதில் குறைந்த வாக்குகளை பெற்று ஏடிகே வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக செம ட்விஸ்டுடன் ஜனனி வீட்டை விட்டு வெறியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஜனனி நேரடி நாமினேஷனால் ஆனால் அவருக்கு வாக்களித்து இறுதியில் டைட்டில் வின்னராக கொண்டு செல்வோம் என்று அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இப்படி ஆகிவிட்டதே என ஜனனியின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஜனனி வாங்கிய சம்பளம்
இந்நிலையில்,பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும், அவர் பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்ததால், பல லட்சத்திற்கு மேல் சம்பளமாக வாங்கி உள்ளார். அவர் வாங்கிய சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் வாய்பிளந்து இருக்கிறார்கள்.