twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்

    |

    Recommended Video

    டபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ் | Bhagyaraj

    சென்னை: எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று சொல்லிவிட்டு கடைசியில் கதையில் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்று இயக்குநர் பாக்யராஜ் நகைச்சுவையாக பேசி கூட்டத்தை கலகலப்பாக்கினார்.

    தமிழ் சினிமாவில் புதிதாக ஒரு கதை படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுவிட்டால், தொடர்ந்து அதே மாதிரியான கதைகளையே எடுத்து படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றுவார்கள். ஒரு திகில் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதே மாதிரி குறைந்தது டஜன் படங்களாவது வெளிவரும்.

    பேய் படம் என்றால் தொடர்ந்து அதே மாதிரியே எடுத்து, படம் பார்ப்பவர்களை ஆளை விட்டால் போதும்டா சாமீய் என்று சொல்லும் வரை ஓயமாட்டார்கள். அந்த கேட்டகரியில் முதலில் வந்த படம் தான் மிருதன். இதற்க அடுத்ததாக யோகி பாபு, யாஷிகா ஆனந்த்தை வைத்து இப்பொழுது ஜாம்பி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏலியன் படம்

    ஏலியன் படம்

    அந்த வரிசையில் இப்போது, ஹாலிவுட்டில் எத்தனையோ முறை எடுத்து புளித்துப்போன ஏலியன்கள் பற்றிய அறிவியல் புனைவு கதையை தமிழில் எடுக்க முன்வந்துள்ளனர். இது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது படம் வெளிவந்த பின்பே தெரியவரும்.

    ஆரி - சாஷ்வி

    ஆரி - சாஷ்வி

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அறிமுக இயக்குநர் யு.கவிராஜ் இயக்கத்தில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்கும் அறிவியல் புனைவு படத்தை ராவுத்தர் மூவிஸ் சார்பாக இப்ராஹிம் ராவுத்தர் மகன் எ.முகமத் அபூபக்கர். இந்தப் படத்திற்கு இசையமைப்பது கார்த்திக் ஆச்சர்யா. மொட்டை ராஜேந்திரன், பகவரி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது லக்ஷமன்.

    ராவுத்தர் மூவிஸ்

    ராவுத்தர் மூவிஸ்

    மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு படத்தயாரிப்பில் இறங்கியுள்ள இப்ராஹிம் ராவுத்தரின், ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவான எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது.

    எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்

    எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்

    இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாக்யராஜ், எல்லோரையும் அட்ராக்ட் பண்ணும் விதத்தில் இந்தப் படத்தின் தலைப்பை வைத்திருப்பது போல் தெரிகிறது. ஆனால், எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு நினைத்துக்கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தையும், மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று நினைத்து கோட்டை விட்டுவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    உழைப்பு முக்கியம்

    உழைப்பு முக்கியம்

    எனக்கென்னவோ காலம் காலமாக மனிதர்கள் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் எந்த பிரச்சனையும் தீர்ந்ததாக தெரியவில்லை. இருந்தாலும் நம்முடைய உழைப்பு மிக முக்கியம். படத்தின் டைட்டிலைப்போல் அசட்டையாக இருக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று நகைச்சுவையாக பேசினார்.

    ஏலியன்கள் கதை

    ஏலியன்கள் கதை

    அடுத்து பேசிய இப்படத்தின் இயக்குநர் கவிராஜ், நாங்கள் அனைவருமே எங்களின் முழு உழைப்பையும் அளித்துவிட்டுத்தான், மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று சொல்லியிருக்கிறோம் என்று பவ்யமாக கூறினார். இப்படத்தின் கதை என்பது, விண்ணில் இருக்கும் ஏலியன்கள் தவறவிட்ட ஒரு பொருள், நமது பூமியில் வந்து விழுகிறது. அதை தேடிவரும் ஏலியன்களைப் பற்றிய கதையாம்.

    English summary
    Do not neglect the line at the end of the story, saying that he will take care of everything, said Director K.Bhagyaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X