பிரபல 'ராக் அண்ட் ரோல் கிங்'-கின் ஒரே பேரன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! ரசிகர்கள் அதிர்ச்சி!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர் பேரன் திடீரென தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் எல்விஸ் பிரெஸ்லி. ராக் அண்ட் ரோல் கிங் என கூறப்படும் இந்த இசைக் கலைஞர் நடிகரும் கூட.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். இருபதாம் நூற்றாண்டின் கலாசார சின்னமாக விளங்கியவர் இவர்.

கிராமி விருதுகள்

கிராமி விருதுகள்

இசை, சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் பங்கேற்றவர். இவரது இசைப்பதிவுகள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் விற்பனையில் சாதனை படைத்தன. கிராமி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர் இவர். தனது மாய குரலால் இசை ரசிகர்களை கவர்ந்த பிரெஸ்லி, உடல் நலப் பிரச்னைகளாலும், போதை மருந்துக்கு அடிமையானதாலும் 1977 ஆம் வருடம் தனது 42 ஆவது வயதிலேயே காலமானார்.

பெஞ்சமின் கியோவ்

பெஞ்சமின் கியோவ்

இவரது ஒரே மகள் லிசா மேரி. இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும். மகன் பெஞ்சமின் கியோவ் (Benjamin Keough). எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே பேரனான இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள கலாபாசாஸ் என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் குண்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு வயது 27.

தற்கொலை

தற்கொலை

தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். பெஞ்சமின், தனது துப்பாக்கியால் தானே சுட்டுக்கொண்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதை லிசா மேரியின் மானேஜர் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கான காரணம் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்விஸின் சாயல்

எல்விஸின் சாயல்

'இந்த சம்பவத்தால் நொறுங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார் லிசா மேரி. தற்கொலை செய்துகொண்ட பெஞ்சமின், அப்படியே எல்விஸின் சாயலைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவரும் இசைக்கலைஞராக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த எல்விஸின் 40 வது நினைவு நாள் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X