கருவை சுமக்கும் கடவுளாக இருக்கிறேன்.. நிர்வாண செல்ஃபியை வெளியிட்ட நிறைமாத கர்ப்பிணி நடிகை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி தனது முழு நிர்வாண செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் நடிகையாகவும் பிரபல மாடல் அழகியாகவும் திகழ்பவர் நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி.
பிரபல ஹாலிவுட் படமான கான் கேர்ள் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

27 மில்லியன் ரசிகர்கள்
அழகு சாதன பொருட்கள், உள்ளாடை நிறுவனங்களுக்கும் பிராண்ட் மாடலாக செயல்பட்டு வரும் இவர் எம்ரடா எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் உலா வருகிறார். இவர் பதிவிடும் ஹாட் போட்டோக்களை ரசிப்பதற்காகவே இவரை 27 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக பின் தொடர்கின்றனர். இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கம்.

அந்த இடத்தில் டாட்டூ
தனது முதுகுக்கு கீழே தனது நிக் நேம் ஆன எம்ரடா எனும் பெயரை பச்சைக் குத்தி உள்ளார் நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி. ஈஸி, வி ஆர் யுவர் பிரெண்ட்ஸ், ஐகார்லி, ஹாட் கேர்ள்ஸ் வான்டட், இன் டார்க்னஸ் என ஏகப்பட்ட திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் இவர்.

காதல் கணவர்
முன்னதாக இசைக் கலைஞர் ஜெஃப் மேகிட் உடன் டேட்டிங் செய்து வருகிறார் எம்ரடா என்கிற செய்திகள் அமெரிக்க நாளிதழ்களில் பரவின. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான செபாஸ்டியன் பியர் மெக்லார்டை திருமணம் செய்து கொண்டதாகவும். இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்ததாகவும் அறிவித்தார்.

கருவுற்ற எம்ரடா
கடந்த ஆண்டு லாக்டவுனில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் பல பிரபலங்களும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். எம்ரடாவும் கடந்த லாக்டவுனில் கருவுற்றார். தொடர்ந்து தனது கர்ப்ப வயிற்றை காட்டியபடி பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.

கருவை சுமக்கும் கடவுள்
இந்நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை எமிலி ரதஜ்கவுஸ்கி தனது முழு நிர்வாண மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக மனித உருவில் இருக்கும் Winnie the Pooh போல இருக்கிறேன் என தோன்றுகிறது. சில நேரங்களில் கருவை சுமக்கும் கடவுளாக இருக்கிறேன் என்றும் தோன்றுகிறது என பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

2 மில்லியன் லைக்ஸ்
நடிகையும் மாடல் அழகியுமான எமிலி ரதஜ்கவுஸ்கி வெளியிட்ட இந்த நிர்வாண நிறைமாத செல்ஃபியை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த போட்டோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது. ஏகப்பட்ட பிரபலங்களும் விரைவில் அழகான குழந்தையை பெற்றெடுக்க எம்ரடாவை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











