சினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாரி பாட்டர் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை எம்மா வாட்சன் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாதது குறித்தும், தனது திருமண நிச்சயதார்த்த வதந்தி குறித்தும் மனம் திறந்து போட்டுள்ள ட்விட்டர் பதிவுகள் உலகளவில் வைரலாகி வருகின்றன.

கடந்த ஓராண்டாகவே நடிகை எம்மா வாட்சன் புதிதாக எந்தவொரு படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

நடிகை எம்மா வாட்சனுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாகவும், அதன் காரணமாக இனிமேல் அவர் தொடர்ந்து நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் பரவின.

ஹாரிபாட்டர் நடிகை

ஹாரிபாட்டர் நடிகை

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் பிறந்தவர் நடிகை எம்மா வாட்சன். 31 வயதாகவும் அவர், குழந்தை பருவத்தில் இருந்தே ஹாரிபாட்டர் படங்களில் ஹெர்மியோன் கிராஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்து உலக சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பெற்றவர். மங்கை பருவத்தை எட்டிய பிறகு ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆஸ்கர் படத்தில்

ஆஸ்கர் படத்தில்

தி பெர்க்ஸ் ஆஃப் பியீங் எ வால் ஃபிளவர் பியூட்டி அண்ட் தி பீஸ்ட் மற்றும் ஆஸ்கர் விருதை வென்ற லிட்டில் உமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகை எம்மா வாட்சன் கடந்த ஒரு வருடமாக புதிதாக படங்களில் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. இதன் காரணமாக சினிமாவை விட்டே எம்மா வாட்சன் விலகிவிட்டார் என்ற தகவல்கள் பரவின.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்மா வாட்சன் தனது காதலர் லியோ ராபின்டனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலான நிலையில், இருவரும் மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றும் ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

ஓராண்டுக்கு பிறகு

ஓராண்டுக்கு பிறகு

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு தற்போது தான் முதன்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடர்ச்சியாக ட்வீட்களை போட்டு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை எம்மா வாட்சன்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

கடந்த ஒரு வருடமாக உலகமே கொரோனா பாதிப்பு காரணமாக அல்லல் பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய படங்களில் ஒப்பந்தம் ஆவதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. நமக்கு பிடித்தமானவர்களுடனும் குடும்பத்தினருடனும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் நேரத்தை செலவிடலாமே என்று தான் அமைதியாக உள்ளேன் என்றுள்ளார்.

கண்டிப்பா சொல்றேன்

கண்டிப்பா சொல்றேன்

மேலும், நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன் போன்ற வதந்திகள் மிகவும் படுத்தி எடுக்கின்றன. புதிய படங்களில் நடிக்க தொடங்கினாலும், நிச்சயதார்த்தம் செய்து கொண்டாலும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு அறிவித்து விட்டே செய்து கொள்வேன், வீணாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் எம்மா வாட்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X