For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணர்வு ரீதியான கல்விமுறை அவசியம் - லதா ரஜினிகாந்த்

|
ரஜினி விளம்பரத்தில் நடிக்கவுள்ளாரா?.. மனைவி ஓபன் டாக் | Latha RajiniKanth Exclusive

நமது நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்வு முறை மட்டுமல்ல கல்வி முறையையும் கூட முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். உணர்வு ரீதியான கல்விமுறையை கொண்டு வரவேண்டியது இன்றைக்கு அவசியமான ஒன்று என்று பட்ஸ் என் பட்டீஸ் மழலையர் பள்ளி தொடக்க விழாவில் கலந்துகொண்ட லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டு பேசினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி அடுத்த கல்வியாண்டு முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்படி 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.

Emotional education system - Latha Rajinikanth

அதோடு, தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற மழலையர் பள்ளியின் துவக்க விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகள் என்பவர்கள் மொட்டுக்கள். அவர்களுக்கு உணர்வு ரீதியான கல்விமுறை தான் தேவை என்று கூறியுள்ளார்.

திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா.. அப்போ அவருடன்தானா?!

கடந்த ஆண்டு பீஸ் ஃபார் சில்ட்ரன் என்கிற நிகழ்ச்சியில் பேசம்போது, குழந்தைகளுக்கு எல்லா வழிகளிலும் நாம் செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம். அவர்களுக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பு முறைகள், கல்வி என அனைத்து விதமான அறிவிப்புகளையும்வெளியிட்டிருந்தோம்.

Emotional education system - Latha Rajinikanth

அந்த மேடையில் அறிவித்த பட்ஸ் என் பட்டீஸ் (Buds N Buddies) என்ற ரஜினிகாந்த் ஏற்படுத்திய முயற்சியை, நாங்கள் இப்பொழுது நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். நல்ல கல்வி முறை நம்முடைய குழந்தைகளுக்கு மிக முக்கியம். அதிலும் சிறுவயது கல்வி என்பது அதாவது பிறந்தது முதல் எட்டு வயது வரை குழந்தைகள் நல்ல மனோ பலத்துடன் வளரவேண்டிய வயதாகும்.

அவர்களுக்கு உணர்வு ரீதியாக சரியான கல்விமுறை அவசியம். அவர்களுக்கு பயமோ, மன அழுத்தமோ, அல்லது போட்டியோ இல்லாமல், மிகவும் ஆனந்தமா, அமைதியா ஆரோக்கியமா, அரவணைப்போட வளரவேண்டிய கல்விமுறை இருக்கவேண்டும். அந்த கல்விமுறையோட முயற்சிதான் பட்ஸ் என் பட்டீஸ்.

அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்விமுறையை நாம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் எப்படி இயற்கையாக கல்வியை கற்கவேண்டும். அதற்கு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து எட்டு வயது வரைக்கும் அவர்களுக்குள் இருக்கின்ற எல்லாவித ஆனந்தமும் நமக்கு தெரிய வேண்டியது அவசியம். அந்த மாதிரி ஒரு அமைதியான கல்விமுறையின் முயற்சிதான் பட்ஸ் என் பட்டீஸ். தாய்மார்கள் கர்ப்பமான நேரத்தில் இருந்து, குழந்தை பிறந்தது முதல் எங்களுடன் அவர்கள் பயணிக்கலாம்.

அவர்களுக்காகவே பட்ஸ் அகாடமி என ஒன்று உள்ளது. அதில், குழந்தைகளுக்கு தேவையான மனோரீதியான ஆலோசனைகள், ஆலோசகர்கள், மருத்துவர்கள் என அனைவருமே உள்ளனர். அது தவிர, பள்ளிக்கூடம், அதாவது, ப்ரீ கே4, எல்.கே.ஜி என சொல்லாமல், நிலை ஒன்று நிலை இரண்டு (Level 1. Level 2) என குழந்தைகள் ஆனந்தமாக, அமைதியாக வந்து, தன்னைத்தானே இந்த கல்விமுறையில் இணைந்து எப்படி செல்லவேண்டும் என்று சொல்வது தான் பட்ஸ் என் பட்டீஸின் முயற்சியாகும்.

இதைத்தான் அந்த காலத்தில், குருகுல கல்வி முறையில் கற்றுத்தந்தார்கள். அதில் தான் அவர்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் செய்தனர். அப்படி இருந்தால் தான் மிக இயற்கையாக ஆனந்தமாக கல்வி பயில முடியும் என்றார் லதா ரஜினிகாந்த்.

English summary
In our country, the government has mandated that the general election is compulsory for grades 5 and 8 from next year. But Latha Rajinikanth, who was attending the Kindergarten inauguration, said that it was necessary to bring the 'emotional' education system.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more