அஜித் ரசிகர்கள் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்.. வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கம்!
சென்னை: நடிகர் அஜித்தை தாக்கி பேசவில்லை. ரசிகர்களுக்காக தான் நான் பேசினேன், ஆனால் அவர்கள் எனக்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
வலைபேச்சு அந்தணன், அஜித் குறித்து அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவால் பணம் சம்பாதிக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் தான் அஜித். இதனால் தான் அஜித்தை புறக்கணிப்போம் வாங்க என சொல்கிறேன் என்றார்.

வலைப்பேச்சு அந்தணன்: மேலும், அவருடைய பழைய பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில், அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது என அஜித் பேசி இருந்தார். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இப்படி இருக்கும் நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க? எஸ்.ஜே.சூர்யா இல்லைனா ஒரு வாலி இல்லை. முருகதாஸ் இல்லைனா ஒரு தீனா இல்லை. இதெல்லாம் அஜித்துக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்கள். ஆனால் அதை பற்றி எங்கேயாவது சொல்லியிருப்பாரா? இப்படி இருக்கும் நபரை நாம் எப்படி மதிப்பது? கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித் என்று பேசி இருந்தார்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: அந்தணனின் பேச்சால் கொந்தளித்துப்போன அஜித் ரசிகர்கள், அஜித்தின் தகுதி பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி என்றனர். மேலும், அந்தணனை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள அந்தணன், நான் அஜித்தை தாக்கி பேசவில்லை, மற்ற நடிகர்கள் இயக்குநர் சொல்வது போல அல்லது இயக்குநர்கள் விரும்புவது போல ஏன் இல்லை என்பது தான் என்னுடைய கேள்வி. அதுமட்டுமில்லாமல் நான் அஜித் என்று இல்லாமல், கொஞ்சம் கீழே இறங்கி வரவேண்டும் என்பதும், அனைவருக்கும் இலகுவானவராக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி. மற்றபடி அஜித்தை குறைசொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இல்லை.
தரம் தாழ்ந்து விமர்சனம்: மேலும், நான் பேசுவதால், அவரின் புகழுக்கு இழுக்கு வந்துவிடாது. நான் பேசியதே அஜித் ரசிகர்களுக்காகத்தான், ஆனால், அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











