தளபதி அரசியலுக்கு வந்ததில் இருந்து அழுகை மட்டும் தான் மிஞ்சுது.. இணையத்தில் கலங்கும் விஜய் ரசிகர்கள்

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகம் படத்தின் காட்சிகள் லீக் ஆனது தொடர்பாகத்தான் இருக்கிறது. மொத்த திரை உலகமும் இது தொடர்பாகத்தான் பரபரப்பாகவும் வருத்தத்துடனும் பேசிக் கொண்டிருக்கிறது. யார் இதனை லீக் செய்தார்கள் எப்படி லீக் ஆனது என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தயவு செய்து இந்த காட்சிகளை இணையத்தில் தொடர்ந்து பகிர வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக ரசிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு வந்தாலும் இணையவாசிகள் பலரும் ஜனநாயகன் பட காட்சிகளை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் இணையத்தில் எந்தெந்த கணக்குகளில் ஜனநாயகன் பட காட்சிகள் பகிரப்படுகிறது. அந்த கணக்குகளை எல்லாம் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் காவல்துறையில் சொல்லி முடக்கியும் வருகிறது. ஆனாலும் இணையவாசிகள் போலி கணக்குகள் மூலமும் புதிய புதிய கணக்குகள் மூலமும் ஜனநாயகன் படத்தின் காட்சிகளை லீக் செய்து வருகிறார்கள்.

Emotional Turmoil Among Fans After Thalapathy Vijay s Political Entry Amid Jananayagan Leak Controversy

ஒருபுறம் குறிப்பாக அரசியல் களத்தில் விஜய்க்கு எதிராக நிற்பவர்கள் இந்த பட காட்சிகளை வெளியிட்டது விஜயாக தான் இருக்கும் என்றெல்லாம் கூட இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் விஜய் தொடர்ந்து சிம்பதி அரசியலையே கையில் எடுத்து வருகிறார். அந்த வகையில் தனது படத்தை இணையத்தில் லீக் செய்து விட்டார்கள் என்று தனது ரசிகர்கள் முன்னிலையில் பேசி சிம்பதியை உருவாக்கவே இவ்வாறு ரிலீஸ் செய்துள்ளார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்திற்கு அரசியல் தளத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு இதுபோன்ற சிம்பதியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.

Emotional Turmoil Among Fans After Thalapathy Vijay s Political Entry Amid Jananayagan Leak Controversy

அழுத விஜய் ரசிகர்: ஆனாலும் விஜய் தங்கள் வீட்டில் ஒருவராக தங்களது அண்ணனாக, தங்களது தலைவனாக, நினைக்கும் விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் விஜய்க்கு ஆதரவாக பதிவிடும் பல பதிவுகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஒரு விஜய் ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவு அஜித் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. அதாவது,"அஜித் ரசிகர்களே அது வேறு இது வேறு, வெளிநாட்டில் ரிலீஸ் ஆகுறத ஒரு நாள் முன்னாடி நாங்க போட்டிருக்கோம், நீங்களும் போட்ருக்கீங்க. படம் ரிலீஸ் ஆன காலத்தில் தரமான பிரிண்ட் நீங்களும் போட்ருக்கீங்க நாங்களும் போட்டு இருக்கோம்.

33 வருஷ நடிப்பு: ஆனா இது அப்படி இல்லை, 33 வருஷமா நடித்த நடிகரின் கடைசி படம். பல தடைகளின் மத்தியில் இன்னமும் Censor Issue(Politics) நால ஆகாம இருக்கு. எப்போ ஆகும்னு தெரியாது. இது பக்கா அரசியல் காழ்புணர்ச்சியில் செய்தது தான். இதற்கு துணை நிற்காதீர்கள். ஒரு படம், கடைசியா ஒரு படம், தியேட்டர்ல வரும் கடைசியா நம்ம நடிகரை Screens ல பாத்து கொண்டாடலாம்னு இருந்தேன். தலைவா, நீங்க எப்போ அரசியல் அறிவிப்பு அறிவிச்சிங்களோ, அப்போல இருந்தே அழுகை மட்டும் தான் மிஞ்சுது" என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X