"Emotions are bigger than business" .. கடைசி பட டீசரில் கண் கலங்க வைத்த புனீத் ராஜ்குமார்!

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.

ஜேம்ஸ் படத்தின் டீசரின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கண் கலங்க பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தில் புனீத் ராஜ்குமார் நம்முடன் இல்லையே என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கதறியபடி பதிவுகளை போட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கின்றன.

திடீர் மரணம்

திடீர் மரணம்

கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார். அப்பு என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த புனீத் ராஜ்குமார் 46 வயதில் திடீரென மரணமடைந்தது திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அடுத்த மாதம் அவரது கடைசி படமான ஜேம்ஸ் திரைக்கு வருகிறது.

ஜேம்ஸ் டீசர் ரிலீஸ்

ஜேம்ஸ் டீசர் ரிலீஸ்

கிஷோர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் புனீத் ராஜ்குமார் நடிப்பில் உருவான ஜேம்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாவதை முன்னிட்டு தற்போது அதன் டீசர் அறிவித்தபடியே ரசிகர்களுக்காக வெளியாகி உள்ளது. வலிமை படம் போல இந்த படமும் டார்க் மாஃபியா, மார்க்கெட் பற்றி பேசும் காப் ஸ்டோரியாக உருவாகி உள்ளது.

சிவராஜ்குமார் டப்பிங்

சிவராஜ்குமார் டப்பிங்

நடிகர் புனீத் ராஜ்குமாரின் அண்ணனும் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார் தம்பியின் திடீர் மறைவை அடுத்து இந்த படத்திற்கு எஞ்சியிருந்த டப்பிங் பணிகளை செய்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஸ்பெஷல் கேமியோவாகவும் ஜேம்ஸ் படத்தில் சிவராஜ்குமார் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசத்தல் ஆக்‌ஷன்

அசத்தல் ஆக்‌ஷன்

புனீத் ராஜ்குமார் மறைந்து விட்டார் என்பதை ரசிகர்கள் மறந்து பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் ஆக்‌ஷனில் அசத்தி உள்ளார். அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் ஜேம்ஸ் படம் வெளியாகவிருப்பதன் காரணமாகத்தான் ராஜமெளலி தனது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியையே மார்ச் 25ம் தேதிக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய ரசிகர்கள்

டீசரின் ஆரம்பத்தில் போடப்படும் "Emotions are bigger than business" என்கிற அந்தவொரு வாசகமே ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி விடுகிறது. புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் அனைவரும் கலங்கிய கண்களுடனே இந்த டீசரை பார்த்து வருகின்றனர். பல மில்லியன் இதயங்களின் சொந்தக்காரரான புனீத் ராஜ்குமார் ரெக்கார்டுகளை எல்லாம் பிரேக் பண்றது தான் என் ரெக்கார்டே என பேசும் வசனத்தை கேட்ட ரசிகர்கள், இந்த ஜேம்ஸ் படத்தை மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக மாற்றுவோம் என உறுதி அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X