என் ஆளோட செருப்பைக் காணோம் - முதல் நாள் முடங்கிய வசூல்

By Shankar

Recommended Video

என் ஆளோட செருப்ப காணோம் விமர்சனம்- வீடியோ

விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் ஜெகன் என்கிற கேபி ஜெகன்நாத். அதனை தொடர்ந்து சேரன், பசுபதி நடித்த ராமன் தேடிய சீதை, மற்றும் கோடம்பாக்கம் படங்களை இயக்கினார். மூன்றுமே நன்றாகப் பேசப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் சறுக்கிய படங்கள்.

நான்காவதாக இவர் இயக்கி உள்ள என் ஆளோட செருப்பக் காணோம் படம் நேற்று ரீலீஸ் ஆனது. கயல் ஆனந்தி, தமிழ் பாண்டி, யோகி பாபு, சிங்கம் புலி,கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், ரேகா, ஜெயப்பிரகாஷ் நடித்துள்ள இப்படம் 150க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது.

En Aaloda Seruppa Kaanom Box Office collection

படத்தின் தலைப்பே தியேட்டருக்கு வருபவர்களை தயங்க வைத்தது என்கிறார் தியேட்டர் ஊழியர் ஒருவர். "சினிமா கொட்டாயில வருஷமா வேலை பார்க்கிறேன். இப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. இன்றைக்கு தியேட்டருக்கு வர்ர ஆடியன்ஸ் படம் எப்படி, யாராரு நடிச்சிருக்கா? எவ்வளவு நேரம் படம் ஓடுதுன்னு விசாரிச்சுட்டுதான் டிக்கட்டே எடுக்கிறாங்க. சில நேரங்களில் நாங்க சொல்றத நம்பாம படம் பார்த்துட்டு வர்ர ஆடியன்ஸ்கிட்ட கேட்கிறாங்க. நல்லா இல்லைனு சொல்லிட்ட திரும்பி போயிடுறாங்க. இந்த லட்சணத்தில் செருப்ப காணோம்னு பேரு வச்சா எப்படிங்க... படம் பாக்க ஆன காணோம்," என்றார் பெரிசு.

தமிழ்நாடு முழுவதும் என் ஆளோட செருப்பக் காணோம் படம் திரையிட்ட தியேட்டர்களில் 50 டிக்கட் விற்பதற்கே மூச்சு திணறி விட்டது என்கிறார் புறநகர் பகுதியில் இருக்கும் தியேட்டர் மேனேஜர் ஒருவர். முதல் நாள் தமிழகத்தில் வசூல் ஆன மொத்த தொகை 2லட்சத்து 65000 ரூபாய்.

தியேட்டர்களில் படம் திரையிட டிஜிட்டல் லைசென்சுக்கு செலுத்தப்பட்ட தொகை கூட இன்னும் தியேட்டர்களில் வசூலாகவில்லை என்பது கூடுதல் தகவல். இன்றும் நாளையும் ஏதாவது நடக்குமா தெரியவில்லை!

-ஏகலைவன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X