என் காதலி சீன் போடுறா.. அட இது ஒரு படத்தோட பேரு பாஸ்.. இன்று பூஜை!

அங்காடித்தெரு மகேஷ் ஹீரோவாக நடிக்கும் என் காதலி சீன் போடுறா படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Recommended Video

என் காதலி சீன் போடுறா பட பூஜை-வீடியோ

சென்னை: அங்காடித்தெரு மகேஷ் ஹீரோவாக நடிக்கும் "என் காதலி சீன் போடுறா" என்ற திரைப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் " என் காதலி சீன் போடுறா ". அங்காடிதெரு மகேஷ் ஹீரோவாகவும், புதுமுக நடிகை ஷாலு ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். டி கடை பெஞ்சு படத்தை இயக்கிய ராம்சேவா இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஆடுகளம் நரேன், மனோபாலா, மானாட மயிலாட கோகுல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

En kadhali scene podura movie shooting starts

இந்த படத்தின் தொடங்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விமரிசையாக நடைபெற்ற பூஜையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

En kadhali scene podura movie shooting starts

இந்த படம் பற்றி ஒன்இந்தியாவிடம் பேசிய இயக்குனர் ராம்சேவா, முழு காமெடி படமாக இதை எடுக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

En kadhali scene podura movie shooting starts

அவர் மேலும் கூறியதாவது, " இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான். ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அதிபுத்திசாலிகளும் இருக்கிறார்கள். இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.

En kadhali scene podura movie shooting starts

இந்த படம் காமெடி கலந்த காதல் படம். எனவே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக " என் காதலி சீன் போடுறா" என படத்துக்கு பெயர் வைத்துள்ளோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது".

இவ்வாறு இயக்குனர் ராம்சேவா தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X